உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Saturday 10 November 2018

மரம் வளர்ப்போடு - தீபாவளியும் , மண நாளும்

எத்தனையோ தீபாவளி (06.11.2018 ) திருநாள் கடந்து வந்து இருக்கிறேன் .ஆனால் இந்த வருடம் தீபாவளி என்பது எனக்கு மிக சிறப்பான ஒன்றாகவே அமைந்து விட்டது . காரணம் எனது குடும்பத்துடன் கொண்டாடியது மட்டும் அல்லாமல் ஐம்பது (50) மரக்கன்றுகளை வாங்கி வந்து நட்டு வைத்ததுதான்.பலப்பல பட்டாசு வெடித்து அதில் இருந்து வெளிவரும் கந்தகப்புகை பூமியினையும் வளிமண்டலத்தையும் எவ்வளவு மாசு படுத்துகிறது. மனிதர்கள் பட்டாசு வெடித்து அப்படியே பூமியினை மாசுபடுத்தி அழ வைத்து போகாமல் ஆளுக்கொரு மரம் நட்டு  வைத்தால் எவ்வளவு அழகாய் இந்த பூமி பசுமை வனம் பூத்து சிரிக்கும் .

நான் இந்த வருடம் பல மரக்கன்றுகள் நட்டு வைத்தது , பட்டாசு வெடித்து பூமிக்கு நான் கொடுத்த, எனது குடும்பம் கொடுத்த  மாசுபாட்டிற்கு பிராயசித்தமான செயலாக அமைந்து விட்டது .. ஆனால் இதில் என்ன மேலும் பல நன்மை என்றால் பூமி மாசுபாட்டிற்கு வைத்த மரங்கள் வளரும்போது மண்ணுக்கு மட்டும் அல்லாமல் தன்னை நட்டு வைத்த மனிதனுக்கும் மிக சிறந்த பலன்களை அளிக்க தொடங்குகிறது என்பதுதான்.அந்த வகையில் எனது குடும்பத்திற்கும் இந்த மரங்கள் மிகச் சிறந்த பலன்கள் அளிக்கும் என்பதில் ஐயம் இல்லை.

நேற்று கூடுதல் சிறப்பாக நண்பர் குருநாதன்-மணிமேகலை தம்பதியரின் முதல் திருமண நாளாக (09.11.2018) அமைந்து விட்டது.தற்செயலாக மரக்கன்றுகள் நட்டு வைத்தாலும் அவர்களின்  முதல் திருமண நாளுக்கான பரிசாகவும் அதனையே என் உள்ளம் இயம்புகிறது.. மரக்கன்றுகள் செழித்து வளரட்டும். என்றும் மனப்பூர்வ அன்போடு தம்பதியரும்  வாழட்டும்.

புதிதாய் மரக்கன்றுகள் நடுவோம் !..
புவியின் மாசுபாடினை களைவோம் !!
 - கவிஅன்பு (10.11.2018)












சுயநல மனிதன் - தீபாவளி கவிதை


நமத்து போன ஆசை - தீபாவளி கவிதை


நரகாசுரர்கள் - தீபாவளி கவிதை


கந்தகப்பூ - தீபாவளி கவிதை





தீபாவளி வாழ்த்து கவிதை


Tuesday 23 October 2018

அப்பாவான நண்பருக்கு அன்பு வாழ்த்து

பூமிப்பந்தை
அழகாக்க 
பூந்தளிர் ஓன்று
பிறந்ததே !

உங்கள்
புன்னகை மேலும்
விரிவாக்க
புதிய நிலவொன்று
வந்ததே !.....

பெரும்பாதம் நான்கு
பதிந்த வீட்டில்
சிறு பாதம் பதித்து
வாழ்வை சிறப்பாக்க
சிறு மழலையாய்
சித்திரம் ஓன்று
உதித்ததே!....

பத்து மாத
காத்திருப்பின்
பலனாய்
பௌர்ணமி நாளின்று
பனித்துளியும்
தோன்றியதே!

தேவதையின் வரவு
தெவிட்டாத மகிழ்வு
அப்பா பதவி பெற்ற
அன்பு நண்பருக்கு
அழகான வாழ்த்துகள்...
 - கவிஅன்பு


Tuesday 16 October 2018

கண்தானம் கவிதை

விழியோடு பார்வை 
என்பது நமக்கு
கடவுளின் கொடை....
கடவுளை நம்பாதார்க்கு
இயற்கையின் கொடை….
கடவுளின் கொடையினை
கண்ணற்றோருக்கு தரலாமே...
இயற்கையின் கொடையினை
இருளோடு இருப்பவருக்கு
தரலாமே..
      - கவிஅன்பு 

Monday 15 October 2018

கண்தானம் கவிதை

பகலில் கூட 
இருளை காணும்
பார்வையற்றோர் 
எல்லாம்
இருளில் கூட 
ஒளியினை காண்பர்..
மண்ணில் அழியும்
கண்களை-நாம்
மனமுவந்து 
கொடுப்பதன் வாயிலாய்..
    -கவிஅன்பு 

கண்தானம் கவிதை


உணவுதானம் ஒரு நாள் 
பிறர் பசி நீக்கும்
பொருள்தானம் சில நாள் 
பிறர் ஏழ்மை நீக்கும்
ஆனால் கண்தானம் என்பதோ
வாழ்நாள் எல்லாம் 
பிறர் இருள் நீக்கும்..
        - கவிஅன்பு
 

கண்தானம் கவிதை

 உதிர்ந்த இலைகள்  கூட
 உரமாகி வளமாக்குகிறது
 உயிர்கொடுத்த மண்ணை !
 உதிரமது ஓடும் உயிர்
 கொண்ட மனிதர் நாம்
 வீணாக்கலாமா-நம்
 விலைமதிப்பற்ற கண்ணை !!
 அய்யோ பாவமென்று
 பரிதாபம் பார்த்து
 கடந்து செல்லாமல் 
 பார்விட்டு மறைந்த பின்னும்
 பார்ப்பதற்கு கண் தந்து
 பார்வையற்ற இருவருக்கு
 வெளிச்சமாய்
 கிடந்து செல்வோம்...
     - கவிஅன்பு 


கண்தானம் கவிதை


"இரண்டு கண்கள்
 இரண்டு காட்சி
 காண முடியுமா?"
 கண்ணதாசன் வரிகள்...
 மறைந்த பின்
 முடியுமே-நாம்
 கண்தானம்
 செய்திருப்பின்....
 கண்கள் இரண்டு
 பார்வை ஒன்றல்ல
 இரண்டே...
 விழியற்ற இருவருக்கு
 நம் விழிகளை
 பொருத்துகையில்....
     கவிஅன்பு

கண்தானம் கவிதை


 இருளில் தவிப்போருக்கு
 தற்காலிகமான  
 மெழுகுவர்த்தியாகவும்
 மின்விளக்காகவும் அல்லாமல்
 இடைவிடாமல் சுடர் விட்டு
 ஒளிதரும் பகலவனாகவே
 இருக்கலாம்
 கண்ணில்லாதவருக்கு 
 கண்தானம் செய்தால்...
    - கவிஅன்பு

கண்தானம் கவிதை

  96 வயது முடிந்து..
  100 வயது கடந்து..
  வாழ்ந்து மறைந்தும் கூட
  96 போன்ற திரைப்படம்
  பார்க்கலாமே - நாம்
  கண்தானம் செய்திருப்பின்....
- கவிஅன்பு

(விஜய் சேதுபதி - திரிஷா நடித்த
  96 என்ற திரைப்படம் இப்பொழுது
 மிகவும் பிரபலம் .எனவே 
அந்த 96 திரைப்படம் வைத்து 
இந்த வரிகள்)


பிறந்தநாள் வாழ்த்து கவிதை -தம்பி அருளின் சகோதரிக்காக

பிறந்த நாளோ பன்னிரெண்டு !
பூக்களும் ரசிக்குமே சகோதரி
உன் அழகை கண்டு !!

ஓருயிராய் நீயும் பிறந்து
ஒப்பில்லா உதிரதானம் வழி
ஓராயிரம் உயிர்தனை காக்கின்ற
சிந்தனையுள்ள சிவப்பு சிநேகிதியே!

வறண்டுபோன புவி  நிலையின்
வளம்கொழிக்க மரம் வளர்த்து
பசுமை சிறந்து செழிக்கவேண்டி
பணியது செய்யும்- சமூக
பண்புள்ள சமத்துவ சகோதரியே

சீரற்ற பள்ளியின் தன்மையதை
சீரமைக்க விரும்பியே
வாநண்பா தோள்கொடு தந்த
வாஞ்சையுள்ள நற் சகோதரியே !!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிறந்த தமிழ் மாதமோ புரட்டாசி !
பின்வரும் நாளெல்லாம்  இருக்கட்டும்
வாழ்வு சிறக்க கடவுளின் ஆசி !!

அக்டோபரில் பிறந்த
அருமையுள்ள  சகோதரிக்கு
அருளின் அன்பான பிறந்த வாழ்த்துக்கள்
     - கவிஅன்பு

இனிய காலை வணக்கம் - படங்கள்


கண்தானம் கவிதை

 பார்வை என்பது நம்
 விழி உணர்வு !....
 பார்வையற்றோருக்கு
 விழி கொடுக்கவும்
 வேண்டும் நமக்கு
 விழிப்புணர்வு !!.....
 மறைந்த பின்
 மண்ணுக்குள்
 சென்று விழிகள்
 அழியுது  வீணாய் !.....
 மனமுவந்து அதை
 மற்றவர்க்கு
 கொடுப்போம் தானாய்!!..
-கவிஅன்பு

இனிய காலை வணக்கம் - படங்கள்





கண்தானம் கவிதை

கண் என்பது நம்
 உடலின் ஓர் உறுப்பு !....
 காட்சி என்பதே
 அதன் தனிச் சிறப்பு !!
 மறைந்த பின் அதை
 அழிக்கிறதே
 மண்ணோடு நெருப்பு !
 மற்றவர்க்கதை கொடுத்துதவி 
 மானுடம் காக்க - சக
 மனிதருக்கும் இருக்க வேண்டும்
 கண்தானம் செய்ய
 வேண்டுமென்ற  பொறுப்பு !!
-கவிஅன்பு

கண்தானம் கவிதை

மூன்றாம் கண்
 என்பது சற்று 
 நீளமான ஒரு பொருள்.....
 கைகள் தாங்கி நிற்கும்
 ஒளியற்ற பொருள்....
 நடக்கையில் அடிக்கடி
 சப்தம் எழுப்பும் ....
 ஓரடி தூரம் மட்டுமே
 உணர்வை காண்பிக்கும்....
 ஆம் ! இருகண்ணில்
 பார்வை அற்றவருக்கு
 மூன்றாம் கண் என்பது
 ஒரு கை பிடிக்கும்
 கைத்தடிதானே தவிர
 இரு கை பிடிக்கும்
 ஒளிப்படக்கருவி(camera)அல்லவே !
 கண்தானம் செய்வோம்
 இந்நிலை  மாறவே !!
-கவிஅன்பு

Sunday 14 October 2018

அப்துல்கலாம் பிறந்தநாள் கவிதை

தமிழகத்தின்
கடைக்கோடி
என்பது  ராமேஸ்வரம் !
அங்கு பிறந்த
கடைக்குட்டி  நீதானே
தமிழகத்தின் நல்வரம் !!

உன் மரம் வளர் கவிதை
எனக்கு மிக விருப்பம் !.. ..
நின் கருத்துகள் ஆழ படித்தால்
இளைஞரெல்லாம் ஆவாரே
சிறந்த அறிவில் கர்ப்பம் !!.....

உன் அக்கினி சிறகுகள்
உயரபறந்து புகழில் சிறந்தது !
ஆனாலும் என்னவோ-உன்
மனமும் முகமும் குழந்தையாய்
மாறி அல்லவா சிரித்தது !!

வீணையோடு சேர்ந்து
விண்வெளியினை மீட்டினாய் !
பாரதமும் சிறப்பென்று பாருக்கு- ஏவு
கணையோடல்லவா காட்டினாய் !!

இந்திய மகுடத்தில் நீயொரு
ஜொலிக்கும்  ரத்தினமாம் ! உனை
இதயத்தில் நினைக்கிறோம்
உன் பிறந்த நாளான இத்தினமாம் !!

உன் பெரும்புகழ் என்பது ஏவுகணை !
எப்படி மறப்போம்  நாங்கள்
தமிழருக்கு பெருமை தந்த உனை !!...
  - கவிஅன்பு
(தமிழ் ஒன் இந்தியா நாளிதழில் பிரசுரமான இக்கவிதையின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது  - website url)
https://tamil.oneindia.com/art-culture/poems/a-reader-writes-heart-whelming-poem-behalf-abdul-kalam-on-his-332034.html















Thursday 11 October 2018

உலக பெண் குழந்தைகள் தின கவிதை

பிறந்த நாடும்
பெண்பாலே !...
இனிதாய்-நாம்
பேசும் மொழியும்
பெண்பாலே!!....

தாங்கும் பூமியும்
பெண்பாலே-அழகு
ஓங்கும் இயற்கையதும்
பெண்பாலே....

பெண் குழந்தையே
பூமியின் வரம் !....
அவளின்றியும் உண்டோ
இப்பூமியில்  தரம் ?.....

மழலையாய் பெண்
பிறந்தால் மகிழ்வோம்!...
மானுடம் அவளால்
செழிக்குமென நெகிழ்வோம்!!....

கள்ளிப்பாலுக்கு தீ
வைப்போம் !
அவளுக்கு
கரும்பலகையில்
கல்வி போதிப்போம்!!.

மொட்டுக்களை
கசக்கும் - பாலியல்
மோசங்களை
ஒழிப்போம்!-பெண்
தேவதைகளுக்கும்
சமஉரிமை சமுதாயத்தில்
அளிப்போம் !!...
                -கவிஅன்பு

(தமிழ் ஒன் இந்தியா நாளிதழில் பிரசுரமான இக்கவிதையின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது  - website url)
https://tamil.oneindia.com/news/tamilnadu/international-day-the-girl-child-today-331765.html

Saturday 12 May 2018

செவிலியர் தின வாழ்த்து கவிதை - கவிஅன்பு

சூரியனுக்கு இரவில் ஓய்வு
நிலவுக்கு பகலில்  ஓய்வு
செவிலியருக்கோ
இல்லையே
இப்படியோர் ஓய்வு !

இரவு பகலாய்
பணி செய்தாலும்
சூரியனாய் சுட்டெரிக்காமல்..
அமாவாசையாய்
கடுமை காட்டாமல்...
புன்னகைதனை முகத்தில் காட்டும்
புத்தொளி பௌர்ணமிகள்
செவிலியர்கள் !

வெள்ளை என்றால்
வெறுமை , விதவையென்ற
சமூகத்தில்
வெள்ளை என்பது
கருணை ,சேவையென்று
பதியவைத்து - கடமை
பண்போடு பணிபுரியும் 
வெண்ணிற ஆடை தேவதைகள்
செவிலியர்கள் !

உண்ண நேரமின்றி - நோயாளி
உடல் நலனில் 
அருவருப்பின்றி
அக்கறை காட்டி - தன்னை
உருக்கி பிறரை காக்கும்
தன்னலமற்ற
மெழுகுவர்த்திகள்
செவிலியர்கள் !

கண்ணனுக்கு தெரியாத வேராய்
சேவையில் மருத்துவருக்கும் மேலாய்
அன்னை தெரசாவாய்
நைட்டிங்கேல் அம்மையாராய்
இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்
செவிலியர்கள் அனைவர்க்கும்
செவிலியர் தின வாழ்த்துகள்
        -கவிஅன்பு

Tuesday 1 May 2018

தொழிலாளர் தின வாழ்த்துகள்

அரிதாரம் பூசும்
நடிகர்கள் மத்தியில்
தன் உடலையே
அரிதாரமாய் மாற்றி
உழைக்கும்
தொழிலாளர்களை
மதிப்போம் !
மரியாதையை தருவோம் !!
                         - கவிஅன்பு


Sunday 29 April 2018

மகளின் கவிதை

கிறுக்கல்களின்
மறு அர்த்தம்
கவிதை என்பதை
மகள் சுவற்றில்
கிறுக்கிய பின்பே
முழுமையாய்
அறிய முடிகிறது ..
          - கவிஅன்பு


Saturday 24 February 2018

சாத்தானின் பூமி


தேசத்தின் நிலைமை

ஆயிரம் கோடி
திருடியவன் எல்லாம்
பகட்டாய் வெளிநாட்டிலே !
அரிசியை கொஞ்சம்
திருடியவன் மட்டும்
பாவமாய் சுடுகாட்டிலே !!
           -  கவிஅன்பு


 

Wednesday 21 February 2018

மய்யம்: முப்பது வருட பந்தம்

சென்னை: இன்று மதுரையில் நடத்திய பிரம்மாண்டமான மாநாட்டில், தனது கட்சியின் பெயர், மக்கள் நீதி மய்யம் என்று அறிவித்திருக்கிறார் கமல். மய்யம் என்ற வார்த்தை பலரையும் ஈர்த்திருக்கிறது. பொதுவாக தமிழகத்தில்.. மாநில கட்சிக்கு, “கழகம்” என்று  பெயர் வைப்பதுதான் வழக்கம். பா.ம.க., வி.சி.க. போன்ற சில விதிவிலக்குகள் உண்டு. ஆனால் கட்சி பெயரில் “மய்யம்” என்ற வார்த்தையை கமல் பயன்படுத்துவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. தவிர “மையம்” என்பதே சரி என்று வாதிடுவோரும் உண்டு. “மய்யம்” என்பது பெரியார் பாணி. பெரியாரும் அவரது தொண்டர்களும் தான், “ஐ”க்கு பதிலாக “அய்” என்று பயன்படுத்துவார்கள். அய்யம், அய்யப்பன் என்று எழுதுவார்கள். அதே பாணியை கமலும் பின்பற்றி வருகிறார்.

அது இன்று நேற்றல்ல.. கடந்த முப்பது வருடங்களாகவே இதே பாணியைத்தான் கமல் பின்பற்றி வருகிறார். எண்பதுகளின் இறுதியில் தனது ரசிகர் மன்றத்தினருக்காக கமல் துவங்கிய பத்திரிகையின் பெயர், “மய்யம்”. அது வழக்கமான ரசிகர் மன்ற இதழாக இல்லாமல், இலக்கிய கட்டுரைகள், அறிவியல் சார்ந்த விசயங்கள் என்று வாசகரின் (ரசிகரின்) தரத்தை உயர்த்துவதாக இருந்தது.   தவிர அப்போதே, “மய்யம்” என்ற பெயர் பேசுபொருள் ஆனது. அந்த இதழ் சில வருடங்களில் நிறுத்தப்பட்டது. ஆனாலும் கமலின் இதயத்தில் “மய்யம்” மையம்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் மய்யம் இதழை, இணைய இதழாக கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டார் கமல்.

கடந்த 2010ம் ஆண்டு, இதற்கான நடவடிக்கைகளில் இறங்கினார். இந்த இதழுக்காக பேராசிரியர் தொ.பரமசிவன், எழுத்தாளர் நீல பத்மநாபன் ஆகியோருடன்   ஆலோசனை நடத்தினார். நெருங்கிய நண்பர்களான வசனகர்த்தா கிரேஸி மோகன், தமிழறிஞர் ஞானசம்பந்தன், எழுத்தாளர் இரா.முருகன் மற்றும் நடிகை கௌதமி ஆகியோர் கொண்ட குழு மய்யம் இணைய தள வடிவமைப்பையும், செயல்திட்டத்தையும் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டார்கள். ஆனால் ஏனோ அந்த முயற்சியும் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இப்படி கடந்த 30 ஆண்டுகளாக கமலுடன் தொடர்ந்து பயணித்த “மய்யம்” தற்போது கட்சியின் பெயரில் இணைந்திருக்கிறது.
இனி கட்சி இதழாக “மய்யம்”"

Monday 12 February 2018

எனதருமை மனைவியே !

எழிலான முக தோற்றம்
எண்ணி பார்க்க வைக்கும்
உடல் தோற்றம்  கொண்டு
எத்தனைதான் பெண்கள் இங்கு
ஏராளமாய் இருந்தாலும் - என்
அழகு அதனை பொருட்படுத்தாமல்
அன்பினால் உறவை வளர்த்து
அமிர்தமாய் சொற்கள் பேசி
நேசமதை நிறைவாக தந்து
பாசமதையே பண்பாக கொண்டு
விட்டுக் கொடுக்கும் குணமுடன்
வியப்புற என்னை வாழவைத்து
கஷ்டமோ நஷ்டமோ பகிர்ந்து
காலமெல்லாம் என்னுடன் வரும்
கனிவான மனைவிபோல் வருமா?
காலமெல்லோருக்கும் இப்படி தருமா?
நேசிக்கிறாய் மனைவியே நீயென்னை
நேசிப்பேன் காலமெல்லாம் நானுன்னை !
                             - கவிஅன்பு

அப்பாவின் சொல் கவிதை - கவிஅன்பு

கருவது  வளரும்போது கால்கள் அசைய
வயிற்றருகே வாய்வைத்து - அன்பு
வாஞ்சையுடன் பேசுவதும்   ...
கனமான பொருளை தூக்காதே...
கால்கள் இடற நடக்காதே என்று
அக்கறையுடன் அன்னையிடம்
சொல்வதும்தான்  - கருவின்
காதில்விழும்  தந்தையின்
கனிவான முதல் சொற்கள் ....

மழலையாய் மண்ணில் உதித்தபின்
மடிதனில் தூக்கி வைத்து
மார்போடு சேர்த்து வைத்து
மகிழ்வோடு கொஞ்சிதலில் -தந்தையின்
அடுத்தடுத்த அன்பு சொற்களும்
ஆரம்பமாகி தொடர்கிறது   !.....

கைபிடித்து காலூன்றி நடக்கையிலும்
கண்மண் தெரியாமல் விளையாடி திரிகையிலும்
பள்ளி கல்லூரியில் பாடங்கள்  பயில்கையிலும்
அன்பான  தந்தையின் அதட்டல் சொற்களில்
அக்கறையின் மிகுதியே அதிகம் இருக்கும் !

தவறுகள் செய்தால்
கனிவுடன் பேசுவாள் தாய் - திருத்த
கண்டிப்புடன் பேசுவார் தந்தை ..
கண்டிப்பென்பது வெறும் சொற்கள் அல்ல
கண்முன் தெரியும் பிள்ளையின் எதிர்காலமது !


பொங்கல் வாழ்த்து கவிதை - கவிஅன்பு


Thursday 4 January 2018

பொங்கல் வாழ்த்து கவிதை - கவிஅன்பு

கருது விளைஞ்ச விளை நிலம்
கொறஞ்சு போச்சு!
கல்லு முளைச்ச விலை நிலமா
எல்லாமே ஆச்சு!!
மாடுகள் எல்லாம் காணாம போகுது!
எந்திர மயமா எல்லாம் ஆகுது  !!
இயற்கை மாவு கோலமெல்லாம் மங்கிடுச்சு!
செயற்கை ஸ்டிக்கர் கோலம் வந்துடுச்சு!!
வாழ்த்து சொல்ல அட்டை இப்போ இல்ல!
வாட்ஸ்அப்ல எல்லாம் வந்துருச்சு மெல்ல!!
விவசாயத்துக்கு மாட்டையும் காணோம்!
விரும்பி பாக்க மனுஷனையும் காணோம்!!
விழாவுக்கு  அறுசுவை விருந்தோம்பல் அன்று!
மதுபானத்தை விரும்பி குடிக்கிறான் இன்று !!
பழையன கழிதல் புதியன புகுதலும்
என்பது இதுதானோ?
இறந்து கொண்டு இருக்கும் விவசாயமும்,
இன்புற்று மகிழ்ந்த எம் தமிழர் பண்பாடும்
வாழ்த்துக்களில் மட்டுமே இன்று
வார்த்தைகளாய் வாழ்ந்து
கொண்டிருக்கிறது போலும்...
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...
                  -கவிஅன்பு

பொங்கல் வாழ்த்து கவிதை - கவிஅன்பு

வந்தது தைத்திங்கள் - வாயெல்லாம்
இனிக்கட்டும் சர்க்கரை பொங்கல் !!
வாசலில் வண்ண கோலம் பூக்கட்டும் !
வான் கதிரவனும் வந்து பாக்கட்டும் !!
கரும்ப கடிச்சு சாப்பிடுவோம் -  அண்டை
வீட்டாரையும் விருந்துண்ண கூப்பிடுவோம் !!
பிரிவினை எண்ணத்தில் இருந்து விலகுவோம் !
சாதி மறந்து தமிழராய் நட்புடன் பழகுவோம் !!
விவசாயம் செய்பவர் உழவராம் - அவரே
நம்பசி போக்கும் உணவில் உள்ளவராம் !!
உழவர்களையும் மனதில் நினைப்போம் !
உறவுகளையும் அன்போடு அணைப்போம் !!
தித்திக்கும் தமிழ் பொங்கல் நல்வாழ்த்துகள்..
- கவிஅன்பு

இரத்ததானம் கவிதை - Blood Donate kavithai
























                   
 - கவிஞர் கவிஅன்பு, உச்சிநத்தம்

Monday 1 January 2018

புத்தாண்டு வாழ்த்து கவிதை - கவிஅன்பு


புத்தாண்டு வாழ்த்து கவிதை - Happy New Year kavithai

இலக்கியம் படிக்க நேரமில்லை
இயற்கையை ரசிக்க நேரமில்லை !
நித்திரை தொலைத்து நினக்காய்
நெடுங்கவிதை ஒன்றெழுதி
புன்னகையுடன் வரவேற்கிறேன் - ஆங்கில
புத்தாண்டே உன்னை !....

நிமிடங்கள் எல்லாம் கடந்து புறப்பட்டு
பதினேழு உதிர்ந்து பூக்கும் நீ பதினெட்டு !..
இரவு நேரத்தில்தான் இருக்கும் உன் பிறப்பு ! -
மனதால் வாடும் மனிதரின் -பெருந்துன்ப
இருளை களைந்தால் உனக்கு வரும் சிறப்பு !!

மீத்தேனிலிருந்து முழுமை மீட்பு தந்து
நெடுவாசல் மக்களுக்கு நிம்மதி தந்திடு    !
கதிராமங்கலத்திற்கு களிப்பை தந்திடு !!
விளைநிலம் ஏமாற்றம் தந்து - அரசியல்
வியாபாரிகளும் ஏமாற்றம் கொடுக்க
விவசாயிகள் படும் வேதனைக்கு எல்லாம்
விடியல் ஒன்றை கொடுத்திடு  !

காவிரி,முல்லை நீரால்  தோன்றும்
கலகம்  இல்லாத காலத்தை கொடுத்திடு !
குடும்பத்தை கெடுக்கும் குடிதனை கொடுக்கும்
மதுபான கடையில்லா  மாநிலம் தந்திடு !
உள்நாட்டு கடற்படை கூட உயிர்வாங்கும்
மீனவர் வாழ்வுக்கோர் மீட்சி  கொடுத்திடு !

மரங்களை சாய்த்து மனிதனையும் சாய்க்கும்
ஓகி போன்ற புயலுக்கு  ஓய்வை கொடுத்திடு !
வந்தது நீட்டு(NEET )வாங்கியது ஓருயிரை கேட்டு
இதயம் நிறுத்தா இனிய கல்விநிலை கொடுத்திடு !
கீழடி அகழ்வாய்வு  கிடப்பில் போட்டு - தமிழுக்கும்
கீழான மொழியினை எல்லாம்  பலகையில் போட்டு
அருமை மொழியினை அழிக்க எண்ணும்
அவலம் மாறும் ஆண்டை கொடுத்திடு !

இன்பங்கள் தோன்றட்டும் திக்கெட்டு
சமத்துவம் சமாதானம் சகோதரத்துவம்
உருவாக்க வேண்டுமென்று புறப்பட்டு !
வருக வருக  நீ ரெண்டாயிரத்து பதினெட்டு !!
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

 -துள.கவிஅன்பு,
விழைவுப்பூக்கள் சேவை அமைப்பு,
தூத்துக்குடி.