உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Thursday 4 January 2018

பொங்கல் வாழ்த்து கவிதை - கவிஅன்பு

கருது விளைஞ்ச விளை நிலம்
கொறஞ்சு போச்சு!
கல்லு முளைச்ச விலை நிலமா
எல்லாமே ஆச்சு!!
மாடுகள் எல்லாம் காணாம போகுது!
எந்திர மயமா எல்லாம் ஆகுது  !!
இயற்கை மாவு கோலமெல்லாம் மங்கிடுச்சு!
செயற்கை ஸ்டிக்கர் கோலம் வந்துடுச்சு!!
வாழ்த்து சொல்ல அட்டை இப்போ இல்ல!
வாட்ஸ்அப்ல எல்லாம் வந்துருச்சு மெல்ல!!
விவசாயத்துக்கு மாட்டையும் காணோம்!
விரும்பி பாக்க மனுஷனையும் காணோம்!!
விழாவுக்கு  அறுசுவை விருந்தோம்பல் அன்று!
மதுபானத்தை விரும்பி குடிக்கிறான் இன்று !!
பழையன கழிதல் புதியன புகுதலும்
என்பது இதுதானோ?
இறந்து கொண்டு இருக்கும் விவசாயமும்,
இன்புற்று மகிழ்ந்த எம் தமிழர் பண்பாடும்
வாழ்த்துக்களில் மட்டுமே இன்று
வார்த்தைகளாய் வாழ்ந்து
கொண்டிருக்கிறது போலும்...
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...
                  -கவிஅன்பு

No comments: