உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Monday 12 February 2018

அப்பாவின் சொல் கவிதை - கவிஅன்பு

கருவது  வளரும்போது கால்கள் அசைய
வயிற்றருகே வாய்வைத்து - அன்பு
வாஞ்சையுடன் பேசுவதும்   ...
கனமான பொருளை தூக்காதே...
கால்கள் இடற நடக்காதே என்று
அக்கறையுடன் அன்னையிடம்
சொல்வதும்தான்  - கருவின்
காதில்விழும்  தந்தையின்
கனிவான முதல் சொற்கள் ....

மழலையாய் மண்ணில் உதித்தபின்
மடிதனில் தூக்கி வைத்து
மார்போடு சேர்த்து வைத்து
மகிழ்வோடு கொஞ்சிதலில் -தந்தையின்
அடுத்தடுத்த அன்பு சொற்களும்
ஆரம்பமாகி தொடர்கிறது   !.....

கைபிடித்து காலூன்றி நடக்கையிலும்
கண்மண் தெரியாமல் விளையாடி திரிகையிலும்
பள்ளி கல்லூரியில் பாடங்கள்  பயில்கையிலும்
அன்பான  தந்தையின் அதட்டல் சொற்களில்
அக்கறையின் மிகுதியே அதிகம் இருக்கும் !

தவறுகள் செய்தால்
கனிவுடன் பேசுவாள் தாய் - திருத்த
கண்டிப்புடன் பேசுவார் தந்தை ..
கண்டிப்பென்பது வெறும் சொற்கள் அல்ல
கண்முன் தெரியும் பிள்ளையின் எதிர்காலமது !


No comments: