உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Saturday 10 November 2018

மரம் வளர்ப்போடு - தீபாவளியும் , மண நாளும்

எத்தனையோ தீபாவளி (06.11.2018 ) திருநாள் கடந்து வந்து இருக்கிறேன் .ஆனால் இந்த வருடம் தீபாவளி என்பது எனக்கு மிக சிறப்பான ஒன்றாகவே அமைந்து விட்டது . காரணம் எனது குடும்பத்துடன் கொண்டாடியது மட்டும் அல்லாமல் ஐம்பது (50) மரக்கன்றுகளை வாங்கி வந்து நட்டு வைத்ததுதான்.பலப்பல பட்டாசு வெடித்து அதில் இருந்து வெளிவரும் கந்தகப்புகை பூமியினையும் வளிமண்டலத்தையும் எவ்வளவு மாசு படுத்துகிறது. மனிதர்கள் பட்டாசு வெடித்து அப்படியே பூமியினை மாசுபடுத்தி அழ வைத்து போகாமல் ஆளுக்கொரு மரம் நட்டு  வைத்தால் எவ்வளவு அழகாய் இந்த பூமி பசுமை வனம் பூத்து சிரிக்கும் .

நான் இந்த வருடம் பல மரக்கன்றுகள் நட்டு வைத்தது , பட்டாசு வெடித்து பூமிக்கு நான் கொடுத்த, எனது குடும்பம் கொடுத்த  மாசுபாட்டிற்கு பிராயசித்தமான செயலாக அமைந்து விட்டது .. ஆனால் இதில் என்ன மேலும் பல நன்மை என்றால் பூமி மாசுபாட்டிற்கு வைத்த மரங்கள் வளரும்போது மண்ணுக்கு மட்டும் அல்லாமல் தன்னை நட்டு வைத்த மனிதனுக்கும் மிக சிறந்த பலன்களை அளிக்க தொடங்குகிறது என்பதுதான்.அந்த வகையில் எனது குடும்பத்திற்கும் இந்த மரங்கள் மிகச் சிறந்த பலன்கள் அளிக்கும் என்பதில் ஐயம் இல்லை.

நேற்று கூடுதல் சிறப்பாக நண்பர் குருநாதன்-மணிமேகலை தம்பதியரின் முதல் திருமண நாளாக (09.11.2018) அமைந்து விட்டது.தற்செயலாக மரக்கன்றுகள் நட்டு வைத்தாலும் அவர்களின்  முதல் திருமண நாளுக்கான பரிசாகவும் அதனையே என் உள்ளம் இயம்புகிறது.. மரக்கன்றுகள் செழித்து வளரட்டும். என்றும் மனப்பூர்வ அன்போடு தம்பதியரும்  வாழட்டும்.

புதிதாய் மரக்கன்றுகள் நடுவோம் !..
புவியின் மாசுபாடினை களைவோம் !!
 - கவிஅன்பு (10.11.2018)












No comments: