உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Tuesday 23 October 2018

அப்பாவான நண்பருக்கு அன்பு வாழ்த்து

பூமிப்பந்தை
அழகாக்க 
பூந்தளிர் ஓன்று
பிறந்ததே !

உங்கள்
புன்னகை மேலும்
விரிவாக்க
புதிய நிலவொன்று
வந்ததே !.....

பெரும்பாதம் நான்கு
பதிந்த வீட்டில்
சிறு பாதம் பதித்து
வாழ்வை சிறப்பாக்க
சிறு மழலையாய்
சித்திரம் ஓன்று
உதித்ததே!....

பத்து மாத
காத்திருப்பின்
பலனாய்
பௌர்ணமி நாளின்று
பனித்துளியும்
தோன்றியதே!

தேவதையின் வரவு
தெவிட்டாத மகிழ்வு
அப்பா பதவி பெற்ற
அன்பு நண்பருக்கு
அழகான வாழ்த்துகள்...
 - கவிஅன்பு


Tuesday 16 October 2018

கண்தானம் கவிதை

விழியோடு பார்வை 
என்பது நமக்கு
கடவுளின் கொடை....
கடவுளை நம்பாதார்க்கு
இயற்கையின் கொடை….
கடவுளின் கொடையினை
கண்ணற்றோருக்கு தரலாமே...
இயற்கையின் கொடையினை
இருளோடு இருப்பவருக்கு
தரலாமே..
      - கவிஅன்பு 

Monday 15 October 2018

கண்தானம் கவிதை

பகலில் கூட 
இருளை காணும்
பார்வையற்றோர் 
எல்லாம்
இருளில் கூட 
ஒளியினை காண்பர்..
மண்ணில் அழியும்
கண்களை-நாம்
மனமுவந்து 
கொடுப்பதன் வாயிலாய்..
    -கவிஅன்பு 

கண்தானம் கவிதை


உணவுதானம் ஒரு நாள் 
பிறர் பசி நீக்கும்
பொருள்தானம் சில நாள் 
பிறர் ஏழ்மை நீக்கும்
ஆனால் கண்தானம் என்பதோ
வாழ்நாள் எல்லாம் 
பிறர் இருள் நீக்கும்..
        - கவிஅன்பு
 

கண்தானம் கவிதை

 உதிர்ந்த இலைகள்  கூட
 உரமாகி வளமாக்குகிறது
 உயிர்கொடுத்த மண்ணை !
 உதிரமது ஓடும் உயிர்
 கொண்ட மனிதர் நாம்
 வீணாக்கலாமா-நம்
 விலைமதிப்பற்ற கண்ணை !!
 அய்யோ பாவமென்று
 பரிதாபம் பார்த்து
 கடந்து செல்லாமல் 
 பார்விட்டு மறைந்த பின்னும்
 பார்ப்பதற்கு கண் தந்து
 பார்வையற்ற இருவருக்கு
 வெளிச்சமாய்
 கிடந்து செல்வோம்...
     - கவிஅன்பு 


கண்தானம் கவிதை


"இரண்டு கண்கள்
 இரண்டு காட்சி
 காண முடியுமா?"
 கண்ணதாசன் வரிகள்...
 மறைந்த பின்
 முடியுமே-நாம்
 கண்தானம்
 செய்திருப்பின்....
 கண்கள் இரண்டு
 பார்வை ஒன்றல்ல
 இரண்டே...
 விழியற்ற இருவருக்கு
 நம் விழிகளை
 பொருத்துகையில்....
     கவிஅன்பு

கண்தானம் கவிதை


 இருளில் தவிப்போருக்கு
 தற்காலிகமான  
 மெழுகுவர்த்தியாகவும்
 மின்விளக்காகவும் அல்லாமல்
 இடைவிடாமல் சுடர் விட்டு
 ஒளிதரும் பகலவனாகவே
 இருக்கலாம்
 கண்ணில்லாதவருக்கு 
 கண்தானம் செய்தால்...
    - கவிஅன்பு

கண்தானம் கவிதை

  96 வயது முடிந்து..
  100 வயது கடந்து..
  வாழ்ந்து மறைந்தும் கூட
  96 போன்ற திரைப்படம்
  பார்க்கலாமே - நாம்
  கண்தானம் செய்திருப்பின்....
- கவிஅன்பு

(விஜய் சேதுபதி - திரிஷா நடித்த
  96 என்ற திரைப்படம் இப்பொழுது
 மிகவும் பிரபலம் .எனவே 
அந்த 96 திரைப்படம் வைத்து 
இந்த வரிகள்)


பிறந்தநாள் வாழ்த்து கவிதை -தம்பி அருளின் சகோதரிக்காக

பிறந்த நாளோ பன்னிரெண்டு !
பூக்களும் ரசிக்குமே சகோதரி
உன் அழகை கண்டு !!

ஓருயிராய் நீயும் பிறந்து
ஒப்பில்லா உதிரதானம் வழி
ஓராயிரம் உயிர்தனை காக்கின்ற
சிந்தனையுள்ள சிவப்பு சிநேகிதியே!

வறண்டுபோன புவி  நிலையின்
வளம்கொழிக்க மரம் வளர்த்து
பசுமை சிறந்து செழிக்கவேண்டி
பணியது செய்யும்- சமூக
பண்புள்ள சமத்துவ சகோதரியே

சீரற்ற பள்ளியின் தன்மையதை
சீரமைக்க விரும்பியே
வாநண்பா தோள்கொடு தந்த
வாஞ்சையுள்ள நற் சகோதரியே !!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிறந்த தமிழ் மாதமோ புரட்டாசி !
பின்வரும் நாளெல்லாம்  இருக்கட்டும்
வாழ்வு சிறக்க கடவுளின் ஆசி !!

அக்டோபரில் பிறந்த
அருமையுள்ள  சகோதரிக்கு
அருளின் அன்பான பிறந்த வாழ்த்துக்கள்
     - கவிஅன்பு

இனிய காலை வணக்கம் - படங்கள்


கண்தானம் கவிதை

 பார்வை என்பது நம்
 விழி உணர்வு !....
 பார்வையற்றோருக்கு
 விழி கொடுக்கவும்
 வேண்டும் நமக்கு
 விழிப்புணர்வு !!.....
 மறைந்த பின்
 மண்ணுக்குள்
 சென்று விழிகள்
 அழியுது  வீணாய் !.....
 மனமுவந்து அதை
 மற்றவர்க்கு
 கொடுப்போம் தானாய்!!..
-கவிஅன்பு

இனிய காலை வணக்கம் - படங்கள்





கண்தானம் கவிதை

கண் என்பது நம்
 உடலின் ஓர் உறுப்பு !....
 காட்சி என்பதே
 அதன் தனிச் சிறப்பு !!
 மறைந்த பின் அதை
 அழிக்கிறதே
 மண்ணோடு நெருப்பு !
 மற்றவர்க்கதை கொடுத்துதவி 
 மானுடம் காக்க - சக
 மனிதருக்கும் இருக்க வேண்டும்
 கண்தானம் செய்ய
 வேண்டுமென்ற  பொறுப்பு !!
-கவிஅன்பு

கண்தானம் கவிதை

மூன்றாம் கண்
 என்பது சற்று 
 நீளமான ஒரு பொருள்.....
 கைகள் தாங்கி நிற்கும்
 ஒளியற்ற பொருள்....
 நடக்கையில் அடிக்கடி
 சப்தம் எழுப்பும் ....
 ஓரடி தூரம் மட்டுமே
 உணர்வை காண்பிக்கும்....
 ஆம் ! இருகண்ணில்
 பார்வை அற்றவருக்கு
 மூன்றாம் கண் என்பது
 ஒரு கை பிடிக்கும்
 கைத்தடிதானே தவிர
 இரு கை பிடிக்கும்
 ஒளிப்படக்கருவி(camera)அல்லவே !
 கண்தானம் செய்வோம்
 இந்நிலை  மாறவே !!
-கவிஅன்பு

Sunday 14 October 2018

அப்துல்கலாம் பிறந்தநாள் கவிதை

தமிழகத்தின்
கடைக்கோடி
என்பது  ராமேஸ்வரம் !
அங்கு பிறந்த
கடைக்குட்டி  நீதானே
தமிழகத்தின் நல்வரம் !!

உன் மரம் வளர் கவிதை
எனக்கு மிக விருப்பம் !.. ..
நின் கருத்துகள் ஆழ படித்தால்
இளைஞரெல்லாம் ஆவாரே
சிறந்த அறிவில் கர்ப்பம் !!.....

உன் அக்கினி சிறகுகள்
உயரபறந்து புகழில் சிறந்தது !
ஆனாலும் என்னவோ-உன்
மனமும் முகமும் குழந்தையாய்
மாறி அல்லவா சிரித்தது !!

வீணையோடு சேர்ந்து
விண்வெளியினை மீட்டினாய் !
பாரதமும் சிறப்பென்று பாருக்கு- ஏவு
கணையோடல்லவா காட்டினாய் !!

இந்திய மகுடத்தில் நீயொரு
ஜொலிக்கும்  ரத்தினமாம் ! உனை
இதயத்தில் நினைக்கிறோம்
உன் பிறந்த நாளான இத்தினமாம் !!

உன் பெரும்புகழ் என்பது ஏவுகணை !
எப்படி மறப்போம்  நாங்கள்
தமிழருக்கு பெருமை தந்த உனை !!...
  - கவிஅன்பு
(தமிழ் ஒன் இந்தியா நாளிதழில் பிரசுரமான இக்கவிதையின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது  - website url)
https://tamil.oneindia.com/art-culture/poems/a-reader-writes-heart-whelming-poem-behalf-abdul-kalam-on-his-332034.html















Thursday 11 October 2018

உலக பெண் குழந்தைகள் தின கவிதை

பிறந்த நாடும்
பெண்பாலே !...
இனிதாய்-நாம்
பேசும் மொழியும்
பெண்பாலே!!....

தாங்கும் பூமியும்
பெண்பாலே-அழகு
ஓங்கும் இயற்கையதும்
பெண்பாலே....

பெண் குழந்தையே
பூமியின் வரம் !....
அவளின்றியும் உண்டோ
இப்பூமியில்  தரம் ?.....

மழலையாய் பெண்
பிறந்தால் மகிழ்வோம்!...
மானுடம் அவளால்
செழிக்குமென நெகிழ்வோம்!!....

கள்ளிப்பாலுக்கு தீ
வைப்போம் !
அவளுக்கு
கரும்பலகையில்
கல்வி போதிப்போம்!!.

மொட்டுக்களை
கசக்கும் - பாலியல்
மோசங்களை
ஒழிப்போம்!-பெண்
தேவதைகளுக்கும்
சமஉரிமை சமுதாயத்தில்
அளிப்போம் !!...
                -கவிஅன்பு

(தமிழ் ஒன் இந்தியா நாளிதழில் பிரசுரமான இக்கவிதையின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது  - website url)
https://tamil.oneindia.com/news/tamilnadu/international-day-the-girl-child-today-331765.html