உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Monday 24 August 2015

சாதி வெறி

மதுவினை ஒழிக்க
ஆசைப்பட்டான்.....
சாதியெனும் போதை
வெறியில்
தள்ளாடும் மனிதன்......
       - கவிஅன்பு

திரைப்படம் தயாரிக்கிறானோ கடவுள்?

சிறந்த  திரைப்படம் தயாரிக்க
சிந்தித்தான் கடவுள்...
திறம்பட அதை உருவாக்கிட
திட்டமிட்டு நோட்டமிட்டான்...
சுழலும் பூமிப்பந்தினை நோக்கி
கடவுளின் கண்களும் சுழன்றது..

வெள்ளைத்தாளில் கவிதைகள்
கிருக்கியபடி முகத்தில்
வெண்தாடியுடன் வயதான
இளைஞன் அகப்பட்டான்..
வரிகளுக்கு இவன்தான் என்று
வாலிப கவிஞர் வாலியினை
அழைத்து கொண்டான் கடவுள்..

திருப்தியான மனதுடன்
இமைகளை மூடாமல் இன்னும்
சிறிது தூரம் சுழன்றது
கடவுளின் கண்கள்...
கண்ணாடி அணிந்து
கை அசைவுகளை காட்டியபடி
மனித உறவுகளை படம்பிடித்து
மனதில் நிற்கும் காவியமாய்
உருவாக்கிய
மாபெரும் மனிதர் மாட்டினார்...
இயக்கத்திற்கு இவன்தான் என்று
இயக்குனர் சிகரம் பாலச்சந்தரை
தன் படத்திட்காய்
இணைத்துகொண்டான் கடவுள்...

ஆழ்மனதில் சந்தோசத்துடன்
ஆண்டவனின் தேடல்
மீண்டும் தொடங்கியது....
சற்று நகர்ந்தவனுக்கு  சிறிது
சஞ்சலம் கொடுத்தது  ஒரு இசை
அதுவே சந்தோசமும் கொடுத்தது..
எட்டிபார்த்தவனுக்கு ஏக மகிழ்ச்சி..
ஆர்மோனியம் கையில் வைத்து
ஆர்ப்பரிக்கும் இசை மீட்டிக்கொண்டு
அமைதியுடன் திகழும்  ஒருவன்
 அகப்பட்டான்...
மேன்மையான  இசைக்கு
இவனே மேல் என்று
மெல்லிசை மன்னர் எம்எஸ்வியை
மேலே  கூப்பிட்டு கொண்டான்
கடவுள்.....

கடவுளின் அடுத்த தேடல்
கதாநாயகன்...
இயக்கம்,வரி,இசையென
எல்லாவற்றிலும் திரையுலகை
தேர்வு செய்த கடவுளின் மனம்
நாயகனை  மட்டும்
உண்மையான நாயகனாய் - நிஜ
உலகில் வாழ்ந்த ஒருவனை
தேர்வு செய்ய விரும்பியது...
கிடைப்பானோ? திகைத்து கொண்டிருந்த
கடவுளுக்கு
திடீரென்று அதிர்ச்சி ....
அவன் பிடரியை உரசியபடி
பின்புறம் அக்னி ஜுவாலையுடன்
வானுலகை அதிர வைக்கும்
வாகனம் போல் சென்றது ஒன்று..
அதிர்ச்சியுடன் கூடிய பயம்
கடவுளின் கண்ணில்...

தன்னையே பயம் கொள்ள வைத்த
தன்னிகரில்லா வீரன் யாரென்று
தவித்த கடவுள்
தற்செயலாய் பார்த்தான் பூமியினை ..
அழகான சிரிப்புடன்..அம்சமான உடையுடன்
ஆரவாரமில்லாத ஒருவன்
அங்கே தென்பட்டான்..
"அடடா! இவனல்லவே உண்மையான
நாயகன்" இயம்பியது இறைவன் மனம்...
தன் தயாரிப்பின் நாயகன் தேர்வுக்கு
தகுதியானவான்  இவனென்று
அக்னி சிறகினை கொண்ட ஏவுகணை நாயகன்
தன்னிகரற்ற மனிதன் அப்துல்கலாமை
தன்னுடன்
சேர்த்து கொண்டான் கடவுள்..

அனுமதி கேட்காமல் அடுத்த கணமே
எடுத்து செல்லும் கடவுளுக்கு
அகங்காரம் அதிகம்தான்
"தயாரிப்புக்கு பொருத்தமானவர்கள்
கிடைத்து விட்டார்கள்" என்று
கடவுளின் இதயம்
சந்தோசத்தால் நிரம்பியது....

பிடித்தவர்களை இழந்து வாடும்
மனிதர்களின் கண்களோ
கண்ணீரால் நிரம்பியது..
அதையெல்லாம் துளியும்
கண்டு கொள்ளாமல் தன் தயாரிப்புக்காக
அடுத்த ஒருவனை தேடி சுழன்றது
கடவுளின் கண்கள்...
                       - கவிஅன்பு

Thursday 13 August 2015

சுதந்திர தின வாழ்த்துக்கள்

தாய்ப்பால் வற்றியது என்று
கஷ்டப்பட்டு
வாங்கிய புட்டிபாலில்
கலப்படம்.........
பாலினை போன்ற
வெண்மையினை - தேசிய
கொடியில் பார்க்கிறேன்...

தந்தையின் விவசாயம்
வானம் பார்த்த பூமி,
வறண்டு போன நீர்நிலை
வறட்சியின் பிடியில்
வளமின்றி போனது.....
பசுமை வண்ணம் பச்சையினை
பாரத கொடியில் பார்க்கிறேன்.....

உடுத்த உடையின்றி
வறுமையில்  வாழ்வு
ஆன்மிக ஆறுதல் தேடி
அன்னை தந்தை  வாங்கிய
காவி உடை கூட
கந்தலாகி போனது......
கசங்காத காவி வண்ணம்
கண்கவர் கொடியில் பார்க்கிறேன்......

வீட்டில்  இருந்த
மாட்டு வண்டியும்
காணாமல் போய்
வாகனம்  வாங்க கூட
வசதியில்லை....
பழுதின்றி  சுழலும் சக்கரத்தினை
பாரத கொடியில் பார்க்கிறேன்....

வறுமையால் மதுவினை
குடிக்கின்ற தந்தை
அடிக்கின்றார் அன்னையை...
அக்கம் பக்கம் பார்க்க
அவமானத்தில் தலைகுனிவு......
கர்வத்துடன் கொடி
நிமிர்ந்து பறப்பதை
கண்ணால் பார்க்கிறேன்...

குடும்பத்தை வறுமை
பிடித்து  வாட்டுகிறது!...
ஆனாலும் என்
கைகளோ தேசிய கொடி
பிடித்து ஆட்டுகிறது!!...

வறுமையோட சேர்ந்து
வீட்ட கெடுக்குது குடி!..
கையில  பட்டொளி வீசி
பறக்குது கொடி!!

ஏழ்மையின் பிடியில் இருந்து
எனக்கும்  சுதந்திரம் இல்லை...
வறட்சியின் பிடியில் இருந்து
விவசாயத்துக்கும் சுதந்திரம்
இல்லை- ஊழல்
அரசியலின் பிடியில் இருந்து
அடித்தட்டு மக்களுக்கும்
சுதந்திரம் இல்லை....
சாதி கொடுமையில் இருந்து
சாதாரண மாந்தருக்கும்
சுதந்திரம் இல்லை.....

இருந்தாலும் எல்லாம் தீரும்
என்ற நம்பிக்கையுடனும்
ஒருவித
ஏக்க பார்வையுடனும்
ஒவ்வொரு வருடமும்
உதடுகள் ஏனோ உரைக்கிறது
"சுதந்திர தின வாழ்த்துக்கள்"
என்று...........
                  -கவிஅன்பு (13.08.2015)


சுதந்திர தின கவிதை

தாய்ப்பால் வற்றியது என்று
கஷ்டப்பட்டு
வாங்கிய புட்டிபாலில்
கலப்படம்.......
பாலினை போன்ற
வெண்மையினை
கொடியில் பார்க்கிறேன்.....

தந்தையின் விவசாயம்
வானம் பார்த்த பூமி,
வறண்டு போன நீர்நிலை
வறட்சியின் பிடியில்
வளமின்றி போனது.....
பசுமை வண்ணம் பச்சையினை
கொடியில் பார்க்கிறேன்.....

உடுத்த உடையின்றி
வறுமையில்  வாழ்வு
ஆன்மிக ஆறுதல் தேடி
அன்னை தந்தை  வாங்கிய
காவி உடை கூட
கந்தலாகி போனது......
கசங்காத காவி வண்ணம்
கொடியில் பார்க்கிறேன்......

மனையில்  இருந்த
மாட்டு வண்டியும்
காணாமல் போய்
வாகனம்  வாங்க கூட
வசதியில்லை......
பழுதின்றி  சுழலும் சக்கரம்
பாரத கொடியில் பார்க்கிறேன்......

வறுமையால் மதுவினை
குடிக்கின்ற தந்தை
அடிக்கின்றார் அன்னையை...
அக்கம் பக்கம் பார்க்க
அவமானத்தில் தலைகுனிவு......
கர்வத்துடன் கொடி
நிமிர்ந்து பறப்பதை
கண்ணால் பார்க்கிறேன்.......

குடும்பத்தை வறுமை
பிடித்து  வாட்டுகிறது.....
ஆனாலும் என்
கைகளோ தேசிய கொடி
பிடித்து ஆட்டுகிறது......

பட்டொளி வீசுவது
கொடியில் மட்டும் அல்ல......
வளம் பெறுவோம் என்ற
நம்பிக்கை கொண்ட என்
கண்களிலும்தான்........
                 -கவிஅன்பு


Sunday 9 August 2015

பூமியின் புகைப்பழக்கம்

புகை பிடிப்பது என்னவோ
பூமிதான்...ஆனால்
வாழ்வு இழப்பதோ
வளிமண்டலத்தின்
நுரையீரல்(ஓசோன்)...
புரிந்துகொள் நண்பா
புகை பிடிப்பதால்
உனக்கு மட்டும் அல்ல
உன்னை சார்ந்தவருக்கும்
பாதிப்பு என்று.....
காற்று மாசினை தடு!
புகை பிடிப்பதை விடு!!
         -கவிஅன்பு

அப்துல்கலாமுக்கு அஞ்சலி கவிதை

அக்னி ஏவுகணைக்கு அஞ்சலி
----------------------------------------------
இன்று எம்
இதழ்களில் சிரிப்பு
வரவில்லை!.....
இதயத்தில் உன்
சிந்தனைதான் வருகிறது!!.......

கைகளில் பேனா பிடித்தால்
கவிதை வரவில்லை!....
கண்களில்
கண்ணீர்தான் வருகிறது!!....

உன்னால் நிகழ்ந்தது பொக்ரான்
அணு ஆயுத சோதனை!...
உன் இழப்பு எங்களுக்கு
கடவுள் கொடுத்த சோதனை!!...
-கவிஅன்பு...

ஆண்டவனிடம் அப்துல்கலாம்

ஆண்டவனிடம் அப்துல்கலாம் அக்னி நாயகன் அப்துல்கலாம் மறைவினை போன்று எந்த தலைவரின் இறப்பும் இந்த அளவு எல்லோர் மனதையும் வருத்தமடைய செய்திருக்காது.மக்கள் ஜனாதிபதி என்பது இவருக்கு மட்டுமே பொருந்த கூடிய வார்த்தை என்பது முற்றிலும் உண்மை.அப்துல்கலாமின் மறைவால் இதயத்தில் அதிர்ச்சியும் கண்களில் அழுகையும் கண்டிப்பாக அனைவருக்குமே இருந்திருக்கும்..விழுதுகள் வீழ்ந்தாலும் விதைகள் கண்டிப்பாய் முளைக்கும்.நமக்குள் அவர் விதைத்த நம்பிக்கை என்னும் விதை நம்மிடம் என்றும் நிலைக்க வேண்டும்.அக்னி நாயகன் ஆன்மா இறைவன் திருவடியில் அமைதி பெறட்டும்..
 -கவிஅன்பு

Wednesday 15 July 2015

இறைவனை கவர்ந்த இசை.!.இசையை கவர்ந்த இறைவன்!!

                    தமிழ் திரையுலகின் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அய்யா அவர்களின் மறைவு இசையினை நேசிக்கும் எவரையும் வருத்தம் கொள்ள செய்து இருக்கும்.என்னுடைய மனமும் அவ்வாறே வருந்தியது.சிறு வயதில் யாருடைய இசை என்று தெரியாமலே பல பாடல்களை ரசித்தது உண்டு.சற்று விபரம் தெரிந்த பின்னர்தான் ரசித்த பாடல்களில் பெரும்பாலான பாடல்கள் விஸ்வநாதன் அய்யா இசை அமைத்த பாடல்கள் என்று அறிந்து கொண்டேன்...

         அவர் இசை அமைத்த "நிலவே என்னிடம் நெருங்காதே" பாடலை என் உதடுகள் அடிக்கடி முனுமுனுத்து கொண்டே இருக்கும்..இளைய வயதாய் இருந்தாலும் அவரின் இசையில் அமைந்த பழைய பாடல்கள் எல்லோரையும் போலவே எனக்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.இசையையும் கவிதையும்  நேசிக்கும் மனங்களுக்கு பழையது புதியது என்பது ஒரு பொருட்டல்லவே.பறந்து விரிந்த மலர் தோட்டத்தில் சிலருக்கு ரோஜாவை பிடிக்கும் சிலருக்கும் மல்லிகை பிடிக்கும் அது போலவே விஸ்வநாதன் அய்யா இசை அமைத்த பாடல்களும் ஒவ்வொருவருக்கும் ஒரு விதத்தில் பிடித்து இருக்கும்.

                           மன உணர்வுகளுக்கு ஆறுதல் தரும் பாடல்களை ரசிக்க வைக்கும் வகையில் தரும் இசைக்கடவுள் விஸ்வநாதன் அய்யா.நம் மனம் அவர் பாடல்களில் சரண் அடைந்தது அவரோ இன்று இறைவன் திருவடியில் சரணடைந்து விட்டார்.மண்ணுலக ஒளிவிளக்கு விண்ணுலக  நட்சத்தி- ரங்களில் ஒன்றாக கலந்து  விட்டது.மனித உள்ளங்களை மட்டுமே ஈர்த்த இசை  இறைவன் உள்ளதையும் ஈர்த்து விட்டது போல அதனால்தான் இறைவன் அழைத்து கொண்டானோ?..பறந்து விரிந்த மலர் தோட்டத்தில் சிலருக்கு ரோஜாவை பிடிக்கும் சிலருக்கும் மல்லிகை பிடிக்கும் அதுபோலவே விஸ்வநாதன் அய்யா இசை அமைத்த பாடல்களும் ஒவ்வொருவருக்கும் ஒரு விதத்தில் பிடித்து இருக்கும்..

    இசை உருவம் காட்டாமல் உணர்வை வருடும்..இசைக்கு பிறப்பு உண்டு இறப்பு இல்லை.வாழ்க்கை உண்டு.வயது இல்லை என்னதான் விஸ்வநாதன் அய்யா மறைந்தாலும் நம் அவரது இசையின் வழியே நம் உள்ளத்தோடு இணைத்து இருப்பார்..உணர்வுகளோடு பிணைந்து   இருப்பார்.... வெள்ளைத்தாளின் கவிதை வரிகளை வீதியெங்கும் கொண்டு செல்லும் இசையினை பெரிதும் நேசிக்கும் கவிஞன் என்ற முறையில்  விஸ்வநாதன் அய்யா அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்..
                                                                                     - கவிஅன்பு


Wednesday 1 July 2015

நீரை சேமிப்போம்!

ஓ மனிதா !
ஒவ்வொரு துளி நீரிலும்
இருக்கிறது ஓர்
உயிரின வாழ்க்கை.....
நீரை சேமிக்காவிடில்
இறக்கிறது உன்
உயிரின் வாழ்க்கை.....
உயிர்களிடத்தில் அன்பு காமி!
உயிரோடு வாழ நீரை சேமி!!
                                 - கவிஅன்பு

Friday 26 June 2015

மதுபான கடையும்,மக்கள்நல பணியும்

வேருக்குள்  விஷத்தை ஊற்றி
தண்டுக்கு தண்ணீர்
தருகின்றனர்.....
மதுபான கடைகளும்
மாநில அரசின்
மக்கள் நல பணிகளும்.....
             -கவிஅன்பு

கண்ணதாசன் பிறந்தநாள் கவிதை


Sunday 31 May 2015

உலக புகையிலை எதிர்ப்பு தின கவிதை - எமதூதனின் கடிதம்

உற்ற நண்பர்களுக்கு கூட
உரிய நேரம் கொடுக்காமல்
எனக்காக நீ
எடுத்துக்கொண்ட நேரம்
அதிகம்...

செல்ல காதலியின்
செவ்விதழ் கன்னத்தை  விட
உன்னிதழ்கள்
என்னை முத்தமிட்ட
தருணங்கள்தான்
அதிகம்....

அழகு குழந்தையை
கைகளில் அள்ளி
அன்போடு  கொஞ்சியதை விட
என்னை கொஞ்சிய நேரம்தான்
அதிகம்....

வயதான தாய்தந்தையை
வளர்ந்த பின் தேடாமல்
என்னை நீ அலைந்து
தேடிய நேரமே அதிகம்....

செம்மையான குடும்பத்திற்கு
சேர்த்து வைக்காமல் எனக்காய்
செலவழித்த பணமும் கூட
அதிகம்...

எமதூதன் என்று தெரிந்தும்
ஆழமாய் என்னை
நேசிக்கிறாய்...
விட்டு பிரிந்து செல்ல
அதிகமாய்  நீ
யோசிக்கிறாய்..

என்னையே தேடி வரும்
உனக்காக நிஜமாய்  என்னை
கொடுப்பேன் -ஒருநாள்
எமனுக்காக உன் உயிரையும்
எடுப்பேன் ..
-இப்படிக்கு புகையிலை-
                       - கவிஅன்பு (31.05.2015)