உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Monday 28 October 2019

சுஜித்துக்கான கவிதை - poem for sujith


 ஒருநாள் உணவு வயிற்றுக்கு இல்லையேல்
 உயிர் வாடி துடிப்போம் நாங்களடா..
 அறுபத்து மணி நேரம் எப்படி
 அன்னம் தண்ணீ இல்லாமல் 
 இருக்கிறாய் நீயடா??

 பட்டாசு வெடித்து விளக்கு ஏற்றினாலும்
பார்வை எல்லாம் தெரிகிறது இருட்டாக..
காரணம் உன் நியாபகத்தால் எங்களுக்கு
தெரியவில்லை தீபாவளி ஒரு பொருட்டாக...

தொலை தூர சந்திரனை தொட்டு விடுகிறோம்..
தொடும் தூரத்தில் உன்னையோ
துடிக்க விடுகிறோம்...

 மீத்தேன்வாயு தோண்டி எடுக்கும்  நாட்டிலே
 பெரும் பாவி ஆவோம் - உன்னை
 மீட்டு எடுக்கவில்லை எனில்
 உயிரோடு உன்னை தூக்கி
 எடுக்கவில்லை எனில்...

மீண்டு வருவாயா..
மிகு மகிழ்வு தருவாயா...

உள்ளம் வாடி உன்னை
எதிர்நோக்கும்
தமிழகத்துடன்
#கரிசல் #கவியன்பு

#சுஜித் #sujith #prayerforsujith #poemforsujith #கவிதை #சோகம் #எதிர்நோக்கல்

Tuesday 10 September 2019

சுதந்திர தின கவிதை வீடியோ

சுதந்திர தின கவிதை வீடியோ

#Freedom day#JKV#MEDIA

காதல் தோல்வி - கவிதை - love failure

காதலில் தோல்வியுற்ற ஒரு இளைஞனின் மன உணர்வுகள்
கீழே இருக்கும் வீடியோவில் ---->


#காதல் #தோல்வி  #கவிதை #Love #failure poem

காட்டாமணக்கு

Kattamanakku-Jatropha gossypiifolia-காட்டாமணக்கு



#காட்டாமணக்கு #kattamanakku #Jatropha #gossypiifolia

Sunday 4 August 2019

பராசக்தி வசனம்


நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருகின்றது.

புதுமையான பல மனிதர்களை கண்டிருகின்றது.
ஆனால் இந்த வழக்கு விசித்திரமும் அல்ல.
வழக்காடும் நானும் புதுமையான மனிதன் அல்ல.
வாழ்க்கை பாதையிலே சர்வ சாதாரணமாக தென்படும் ஜீவன்தான் நான்.
கோவிலிலே குழப்பம் விழைவித்தேன்.
பூசாரியை தாக்கினேன்.
குற்றம் சாட்ட பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்.
நீங்கள் எதிர்பார்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்க போகிறேன் என்று.
இல்லை. நிச்சயமாக இல்லை.
கோவிலிலே குழப்பம் விழைவித்தேன்.
கோவில் கூடாதென்பதற்காக அல்ல.
கோவில் கொடியவரின் கூடாரமாக இருக்க கூடாதென்பதற்காக.
பூசாரியை தாக்கினேன்.
அவன் பக்தன் என்பதற்காக அல்ல.
பக்தி பகல்வேஷமாய் ஆகி விட்டதை கண்டிப்பதற்காக.
உனக்கேன் இவ்வளவு அக்கறை.
உலகத்தில் யாருக்கு இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள்.
நானே பாதிக்க பட்டேன்.
நேரடியாக பாதிக்க பட்டேன்.
சுயநலம் என்பீர்கள்.
என் சுயநலத்திலே பொதுநலமும் கலந்த்திருகின்றது.
ஆகரத்துக்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தப்படுத்துகிறதே மீன் அதைப்போல.
என்னை குற்றவாளி என்கிறார்களே.
இந்த குற்றவாளியின் வாழ்க்கை பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று தெரியும்.
பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில்.
படமெடுக்கும் பாம்புகள் நெளிந்திருகின்றன.
தென்றலை தீண்டியதில்லை நான்.
தீயை தாண்டியிருக்கிறேன்.
கேளுங்கள் என் கதையை.
தீர்ப்பு எழுதுவதற்க்கு முன் தயவு செய்து கேளுங்கள்.
தமிழ்நாட்டிலே இந்த திருவிடத்திலே பிறந்தவன் நான்.
பிறக்க ஒரு நாடு.
பிழைக்க ஒரு நாடு.
தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் விதிவிலக்கா?
ரங்கூன் என் உயிரை வளர்த்தது.
உயந்தவன் ஆக்கியது.
திருமண கோலத்திலே இருக்கும் என் தங்கையை காண வந்தேன்.
மோசடி வழக்கிலே ஈடுபட்டு குற்றவாளி கூண்டிலே உங்கள் முன்னால் நிற்கிறாளே இதோ இந்த ஜாலக்காரி ஜாலி.
இவள் வலையிலே விழுந்தவர்களில் நானும் ஒருவன்.
பணப்பெட்டியை பறி கொடுத்தேன்.
பசியால் திரிந்தேன்.
மெலிந்தேன்.
கடைசியில் பைத்தியமாக மாறினேன்.
காண வந்த தங்கையை கண்டேன் கண்ணற்ற ஓவியமாக.
ஆம்.
கைம்பெண்ணாக.
தங்கையின் பெயரோ கல்யாணி.
மங்களமான பெயர்.
ஆனால் கழுத்திலோ மாங்கல்யம் இல்லை.
செழித்து வாழ்ந்த குடும்பம் சீரழிந்து விட்டது.
கையிலே பிள்ளை.
கண்ணிலே நீர்.
கல்யாணி அலைந்தாள்.
கல்யாணிக்காக நான் அலைந்தேன்.
கல்யாணிக்கு கருணை காட்டினார்கள் பலர்.
அவர்களிலே காளையர் சிலர் கைமாறாக அவள் காதலை கேட்டனர்.
கொலை வழக்கிலே சம்பந்த பட்டு கைதியாக நிற்கிறானே இதோ இந்த கொடியவன் வேலு.
இவன் பகட்டால் மயக்க முயன்றான் என் தங்கையை.
நான் தடுத்திறாவிட்டால் என் தங்கை அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பாள்.
கடவுள் பக்தர்களும் கல்யாணியை காப்பாற்ற வந்தார்கள்.
ப்ரதி உபகாரமாக அவள் கடைகண் பார்வையை கேட்டு.
அவளில் தலைமையானவன் இதோ இந்த பூசாரி.
கல்யாணியின் கற்பை காணிக்கையாக கேட்டிருக்கிறான்.
பராசக்தியின் பெயரால்.
உலக மாதாவின் பெயரால்.
கல்யாணி உலகத்தில் புழுவாக துடித்தப்படியாவது உயிரோடு இருந்திருப்பாள்.
அவளை தற்கொலை செய்து கொள்ள தூண்டியது இதோ இந்த பூசாரிதான்.
தன் குழந்தையை இந்த இரக்கமற்ற உலகத்திலே விட்டுச் செல்ல அவள் விரும்பவில்லை.
ஆதரவற்று தன் குழந்தை துடித்துச் சாவதை அவள் விரும்பவில்லை.
அவளே கொன்றுவிட்டாள்.
விருப்பமானவர்களை கொல்வது விந்தையல்ல.
உலக உத்தமர் காந்தி.
அஹிம்சா மூர்த்தி.
ஜீவகாருண்ய சீலர்.
அவரே நோயால் துடித்துக்கொண்டிருந்த கன்றுகுட்டியை கொன்றுவிட சொல்லியிருக்கிறார்.
அது கஷ்ட்டமுறுவதை காண சகிக்காமல்.
அதே முறையைத்தான் கையாண்டிருக்கிறாள் கல்யாணி.
இது எப்படி குற்றமாகும்.
வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஒரு தமிழனுக்கு வாழ்வதற்க்கு வழி இல்லை.
தமிழ்நாட்டிலே பிறந்த ஒரு பெண்ணுக்கு வாழ்வதற்க்கு பாதுகாப்பில்லை.
என் தங்கை மட்டும் கொஞ்சம் விட்டு கொடுத்திருந்தால்..
கோடீஸ்வரனின் வீட்டு பள்ளியறையிலே ஒருநாள்.
மானத்தை விலை கூறியிருந்தால் மாளிகைவாசியின் மடியில்லே ஒருநாள்.
இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை.
இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது.
பகட்டு என் தங்கையை விரட்டியது.
பயந்து ஓடினாள்.
பணம் என் தங்கையை துரத்தியது.
மீண்டு ஓடினாள்.
பக்தி என் தங்கையை பயமுறுத்தியது.
ஓடினாள்.
ஓடினாள்.
வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்.
அந்த ஓட்டத்தை தடுத்திருக்க வேண்டும்.
வாட்டத்தை போக்கியிருக்க வேண்டும் இன்று சட்டத்தை நீட்டுவோர்.
செய்தார்களா.
வாழ விட்டார்களா என் கல்யாணியை.


வக்கீல்: குற்றவாளி யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.

இல்லை யார் வழக்கிற்க்கும் இல்லை.
அதுவும் என் வழக்குதான்.
என் தங்கையின் வழக்கு.
தங்கையின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட அண்ணன் ஓடுவதில் என்ன தவறு.
கல்யாணி தற்கொலை செய்துகொள்ள முயன்றது ஒரு குற்றம்.
குழந்தையை கொன்றது ஒரு குற்றம்.
நான் பூசாரியை தாக்கியது ஒரு குற்றம்.
இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்?
யார்?
யார் காரணம்?
கல்யாணியை கஞ்சிக்கு வழி இல்லாதவளாக அலையவிட்டது யார் குற்றம்.
விதியின் குற்றமா? அல்லது விதியை சொல்லி வயிர் வளர்க்கும் வீணர்கள் குற்றமா?
பணம் பறிக்கும் கொள்ளைக்கூட்டத்தை வளர விட்டது யார் குற்றம்?
பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்க்கு வரவழைத்த வஞ்சகர்களின் குற்றமா?
கடவுள் பெயரால் காமலீலை நடத்தும் போலி பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்?
கடவுளின் குற்றமா? அல்லது கடவுள் பெயரை சொல்லி காலஷேபம் நடத்தும் கயவர்கள் குற்றமா?
இந்த குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும், கல்யாணிகளும் குறைய போவதில்லை.
இதுதான் எங்கள் வாழ்கை ஏட்டில் எந்தப்பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்.

Tuesday 19 March 2019

உயிர் உருவாத பாடல் - Uyir uruvatha song



முடிந்தால் மேல இருக்குற அல்லது கீழ இருக்குற லிங்க கிளிக் பண்ணி  Youtube channela  Subsribe  பண்ணுங்க.கவிதைகள் , பாடல்கள் ,பொது தகவல்கள் இனிமேல் அதன் ஊடாகவும் பெறலாம் கூடிய விரைவில் '' 
                                 

Thursday 14 March 2019

கனவு என்பது - JKV MEDIA


கோயம்பேடு பெயர்க்காரணம்

கோயம்பேட்டில் கோயட்டி என்ற ஒரு குருட்டு நாரை இருந்ததாம். இது தன் பக்தியால், இறக்கும்போதும் இறைநாமம் ஓதிச் சிவலோகப் பிராப்தி அடைந்ததாம்! அதனால் அந்த நாரையின் பெயரால் 'கோயட்டிபுரம்' என்று இந்த இடம் முதலில் அழைக்கப்பட்டு, பின் அது 'கோட்டிபுரம்' என்றாகி நாளடைவில் 'கோயம்பேடு' என மருவியதாம்.

பாவப்பட்ட ஆறுகள்

பெரு&சிறு நகரங்களின்
அழுக்கினை சுமக்கும்
பாவப்பட்ட பேரடிமைகள்
#ஆறுகள்
நாகரிகம் கற்பித்த ஆறுகள்
நாகரிகமற்று முடங்கி
போயி விட்டன மனிதனால்.
--கவிஅன்பு

------------------------------------------------
சென்னை,பெங்களூர், மதுரை,
மதனப்பள்ளி( ஆந்திரா)
எதுவுமே விதிவிலக்கல்ல.

மரம் வளர்ப்பு -வாட்சப் தகவல் - PLANTATION

நேற்று காலை உத்திரமேரூர் அருகே குன்னவாக்கத்தில் உள்ள வன விரிவாக்க மரக்கன்றுகள் பண்ணைக்கு சென்றிருந்தேன்..

ஏற்கனவே 1000 மரக்கன்றுகளை பற்றி பதிவு செய்து இருந்தேன்.. அதை எடுப்பதற்கு..

Forest Officer திரு கிருஷ்ணன் உடன் இருந்தார்.. மிகவும் sincere ஆக மரக்கன்றுகள் வளர்த்து இருக்கிறார்கள்..2 - 3 அடி வளர்ந்த கன்றுகளும் உள்ளன..

அவர் மழை ஆரம்பிக்கும் முன்னரே கொடுத்து விட ஆசைப்படுகிறார்.. Close to *ஒன்றரை லட்சம் மரக்கன்றுகள் அங்கே இருக்கிறது. இதுவரை ஐம்பதாயிரம் கூட போகவில்லை..*

 எங்க team கஷ்டப்பட்டு இவ்வளவும் தயார் பண்ணி இருக்கிறோம் சார்.. நீங்கள் கம்ப்யூட்டரில் போட்டு நாலு பேருக்கு சொல்லுங்கள்.. தாராளமாக என்னுடைய போன் நம்பர் கொடுத்து கூப்பிட சொல்லுங்கள்.. எவ்வளவு வேண்டுமானாலும் மரக்கன்றுகள் தருகிறேன்..!"என்று கூறியுள்ளார்..

இது முற்றிலும் இலவசம்..

திரு. கிருஷ்ணன், Forester, செல் நம்பர்.. +919524506991

நேற்று அவர்களிடம் இருந்த மரக்கன்றுகள் தேக்கு, மகாகனி, பூவரசு, செஞ்சந்தனம், ஈட்டி, குமிழ் தேக்கு, வேங்கை, நெல்லி, பலா ஆகியன.

உடனே கூப்பிட்டு பயன் பெறவும்..?மரம் வளர்ப்போம்!!🌳
நம் தலைமுறை காப்போம்!!🌳

ஆயிரங்காலத்து பயிர் என கூறப்படும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு

🌱மிகக்குறைந்த விலையில் மரக்கன்றுகள் வழங்கப்படும்.🌱

*******
ரூ 15/- மட்டுமே
*******
உங்கள் இல்லம் தேடி வந்து கொடுக்கப்படும்

☘டிம்பர் மரங்கள்
-----------------------------
1.தேக்கு,
2.குமிழ்,
3.மஹோகனி,
4.ரோஸ்வுட் (ஈட்டி),
5.வேங்கை,
6.பூவரசு,
7.நீர்மருது,
8.மலைவேம்பு,

☘பூ மரங்கள்
--------------------
1.மகிழம்,
2.செண்பகம்,

☘ஸ்தல விருட்சங்கள்
-------------------------------------
1.வில்வம்,
2.அரசு,
3.வேம்பு,
4.நாகலிங்கம்.

☘பழ மரங்கள்
-----------------------
1.பலா,  2.நெல்லி 3.நாவல்.

☘நிழல் மரங்கள்
----------------------------
1.சொர்க்கம்,  2.புங்கன், 3.இலுப்பை.

----------------------------------

மிகக்குறைந்த விலையில் மரக்கன்றுகள் கிடைக்கும்.

உங்கள் கரமும், நீங்கள் நடும் மரமும் தழைக்க செய்யட்டும் தமிழகத்தை.....

இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட விலை மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள் குறைந்த விலையில் கிடைக்கும்.

ரூ. 7/- மட்டும்

டிம்பர் மரங்கள்
-----------------------------
தேக்கு, குமிழ், மஹோகனி, ரோஸ்வுட் (ஈட்டி), சிசு, செஞ்சந்தனம், வேங்கை, கருமருது, காயா, தான்றிக்காய், பூவரசு, நீர்மருது, மலைவேம்பு, மஞ்சக்கடம்பு.

பூ மரங்கள்
--------------------
மகிழம், மந்தாரை, சரக்கொன்றை, செண்பகம், ஜகாராண்டா, லெகஸ்டோமியா, தபோபியா, அவலாண்டா, மேஃபிளவர், ஃபாரஸ்ட் பிளேம்.

ஸ்தல விருட்சங்கள்
-------------------------------------
வில்வம், அரசு, வேம்பு, நாகலிங்கம்.

பழ மரங்கள்
-----------------------
பலா, நெல்லி, மாதுளை, கொய்யா, எலுமிச்சை, நாவல்.

நிழல் மரங்கள்
----------------------------
சொர்க்கம், புங்கன், இயல்வாகை, வாதாணி, இலுப்பை.

Address:
ஈஷா நர்சரி மேலக்கால்  மெயின் ரோடு,
ஜெயபாரத் ஹோம்ஸ் உள்ளே,
கோச்சடை, மதுரை.
Contact no: 94425 90015

மற்ற கிளைகள்
----------------------------------------
சென்னை 94440 47049

அம்பத்தூர் 98416 75987

செங்கல்பட்டு 94425 90076

சோளிங்கர் 93608 03551

வேலூர் 94890 45022

திருவண்ணாமலை 94425 90080

விழுப்புரம் 94890 45023

புதுச்சேரி 94890 45025

நெய்வேலி 94425 90029

நாகப்பட்டினம் 9442590049

திருவாரூர் 9442590050

கும்பகோணம் 9944341220

பட்டுக்கோட்டை 9442590034

பேராவூரணி 9487895073

மன்னார்குடி 9487895073

தஞ்சாவூர் 94425 90069

திருச்சி 9442590033

பெரம்பலூர் 9442590075

புதுக்கோட்டை 9442590073

கரூர் 9442590070

கோவை                 9442590074

ஊர்கூடி மரம் வளர்ப்போம்!!
உலகை பசுமை ஆக்குவோம்!!

இலவச மரக்கன்றுகள் வழங்கும் இளந்தளிர் நாற்றுப்பண்ணை...!

மற்ற நண்பர்கள் இப்பதிவை பகிர்ந்து உதவவும்.

நன்றி

Friday 8 March 2019

வா வெண்ணிலா உன்னைத்தானே - smule பாடகன்


கவிதைகள் எழுதுவது மட்டுமல்ல நாங்க பாடவும்
 செய்வோம்...கேட்டு பாருங்க (Play this video) - கவிஅன்பு

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா - நாமளும் பாடுவோம்


கவிதைகள் எழுதுவது மட்டுமல்ல நாங்க பாடவும்
 செய்வோம்...கேட்டு பாருங்க (Play this video) - கவிஅன்பு 

முதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே!

 உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் 
 வரிசைப்படுத்தியிருக்கிறது.
 உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள்.


 சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 
 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் 
 பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. 
 எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது.

 10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin)
 ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் 
 கருதப்படுகிறது.அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.

 9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian)
 இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட 
 அளவில் தோன்றியிருக்கலாம்.

 8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian)
 கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew)
 இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் 
 பழமையானது என்கிறார்கள்.

 6 வது இடத்தில் அராமிக் மொழி (Aramaic)
 அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் 
 மொழியென்று சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் 
 உருவாகியிருக்கிறது.

 5 வது இடத்தில் சீன மொழி (Chinese)
 சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, 
 கி.மு.1200  வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.

 4 வது இடத்தில் கிரீக் (Greek)
 கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ல பிரதேசங்களிலும்கி.மு.1450 ஆண்டளவுகளில் 
 கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.

 3 வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian)
 ஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில்   உருவாகியிருக்கலாம்.

 2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி (Sanskrit)
 இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு 
 அடிப்படையானது. ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது.   இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

 1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil)
 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை 
 உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.

காதல் கவிதை


காதல் கவிதை


காதல் கவிதை


காதல் கவிதை


தாய்மொழி தினம்


நண்பன் பிறந்த நாள்


கவிதைகள் - கவிஅன்பு










Thursday 7 March 2019

What are the top 20 best free video editors in 2019 ?

Lightworks
VSDC Free Video Editor
DaVinci Resolve
Filmora
Freemake
iMovie
Clipchamp
Shotcut
HitFilm Express
Blender
Media 100
Hippo Video
Adobe Premiere Pro
Media Composer
Camtasia
WeVideo
Final Cut Pro X
PowerDirector
Machete
Magisto

Tuesday 29 January 2019

மரம் வளர்ப்போம் -கவிஅன்பு

ஒளிச்சேர்க்கை வழியே-நல்
உணவினை உண்டாலும்
பிறப்பில் இருந்து இறப்புவரை
ஓய்வற்று உனக்காய்,
புகையழுக்கு,தூசியினை தின்றே
புதைந்து மண்ணில் மடிகிறோம்..
ஆனாலும் ஏனோ - எமை
ஆதரிக்க இயலாமல்
அன்னையாகிய மரங்களை
அருமை தெரியாமல் கொல்கிறாயே!..
மதி கெட்டுப்போன மானிடனே!
பேசியது இலைகள்..

மரங்களை வீழ்த்தும்போதெல்லாம்
மானிடமும் வீழ்ந்து போகிறது !
-கவிஅன்பு


கண் தானம் கவிதை-கவிஅன்பு

கணினி வல்லுனரா நீங்கள்
கண நிமிடம் கண்மூடி - கணினியை 
கையால் இயக்கி பாருங்களேன் !

கட்டிட பணியாளரா நீங்கள்
கண்கள் சிறிது மூடிவிட்டு-சிறு
கற்களை நகர்த்தி பாருங்களேன் !

பெரு,சிறு வியாபாரியா நீங்கள்
பொறுமையாய்  கண் மூடி - சில
பொருள் கொடுத்து பாருங்களேன் !

கடமைஉணர்வான அதிகாரியா நீங்கள்
கண்கள் மெல்ல மூடிவிட்டு - சிறிது
கையொப்பம் இட்டு பாருங்களேன் !

காடு,தோட்ட  விவசாயியா நீங்கள்
கருவிழி அது  பாராமல் - கொஞ்சம்
களை எடுத்துத்தான்  பாருங்களேன் !

கருத்து,பதிவிடும்  முகநூல்வாசியா நீங்கள்
கண் கொஞ்சம் திறக்காமல்-இரு
கைகளால் எழுதித்தான் பாருங்களேன் !

கண்பார்வையற்ற மனிதரின் - கொடுங்
கடின வாழ்க்கையது  புரியும்! ...
கண்தானத்தின் அவசியம் - மன 
கருத்துக்கும் அப்பொழுதுதான்  தெரியும்  !
-கவிஅன்பு




Saturday 26 January 2019

முத்தம் - கவிஅன்பு


காத்திருப்பு - கவிஅன்பு


வைகறை வணக்கம் - கவிஅன்பு


காதல் மன்றம் - கவிஅன்பு


செம்பருத்தி கவிதை - கவிஅன்பு



காலை வணக்கம் -குட்டி கதை


மனைவியின் நினைவுகள் கவிதை - கவிஅன்பு


கண்தானம் மீம்ஸ் - கவிஅன்பு



தந்தையாக போகும் நண்பருக்கு வாழ்த்துகவிதை - கவிஅன்பு


நடை பயிற்சி கவிதை - கவிஅன்பு


புரட்சி கவிதை - கவிஅன்பு


தமிழ் புத்தாண்டு கவிதை - கவிஅன்பு



Friday 25 January 2019

இணைய நாளிதழில் என் கவிதை

 January 26, 2019, 7:55 [IST] -கவிஞர் துள.கரிசல் கவிஅன்பு
 நாட்டுப்பண் பாடியதும் - உடல் 
 நரம்புகள் புடைப்பதல்ல தேசபக்தி...
Read more at: https://tamil.oneindia.com/art-culture/poems/republic-day-special-poem-339663.html

குடியரசு தின வாழ்த்து கவிதை - கவிஅன்பு

நாட்டுப்பண் பாடியதும் - உடல்
நரம்புகள் புடைப்பதல்ல  தேசபக்தி
நாட்டின் பிரச்சனைகள்  களைய- நாம்
நாளும் உழைப்பதே தேசபக்தி !..

கொடியேற்றி சுதந்திர தினம்
கொண்டாடுவது மட்டுமல்ல தேசபக்தி-சாதி
கொடுமைகள் செய்ய நினைக்காத
கொள்கையுடன் வாழ்வதே தேசபக்தி !..

பாரதமாதா படத்தினை  வைத்து குனிந்து
பணிவது மட்டுமல்ல தேசபக்தி-உயர்
பட்டம் பெற்றும்  பலநாட்டில் வசியாமல் -நம்
பாரத மக்களுக்கு பணியாற்றுவதே தேசபக்தி !....

தியாகிகள் பெருமை நினைந்து தினம்
திண்ணையில் அமர்ந்து பேசுவது மட்டுமல்ல தேசபக்தி
தனித் திறமையதை வளர்த்து உலகில் - நம்
தேசத்தின் புகழ்  உயர்த்துவதே தேசபக்தி !.....

இந்தியா என் தாய்நாடென்று வெறுமனே 
இயம்புவது மட்டுமல்ல தேசபக்தி-நம்
இனஒற்றுமை,இயற்கைவளம் சீரழியாமல்
இதயம் வைத்து காப்பதே தேசபக்தி !..
 - துள.கவிஅன்பு






















குடியரசு தின வாழ்த்து கவிதை - கவிஅன்பு

கடல் தாண்டி மீன் பிடிக்க
கட்டுடல் மீனவன் சென்றான்
படகு தொட்ட அலை கரை  வந்தது
பாவம் அவனை காணவில்லை ....
ஆட்சி மாறினாலும் அலை போல
தொடரும் மீனவனின் அவல நிலை !....

கா விரி பெயர் போல
காலமெல்லாம் விரிந்து கொண்டே
இருக்கும் காவிரி பிரச்னை
மூச்சடக்கி போராடினாலும் முழுதாய்
தீராத முல்லை பெரியார் பிரச்னை !

போரும் முடிந்தது பொழுதும் விடிந்தது
வீடிழந்து நிலமிழந்து இன்னும்
அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்
அவல நிலை தொடர்கிறதே !
தொப்புள் கோடி தூர சொந்தம்
ஈழ தமிழர் பிரச்னை!

பாட்டனின் நிலப்பரப்பு தமிழ்
பரம்பரைக்கு சொந்தமில்லையாம்
கடல் எல்லையில் கால் வைத்தால்
கல்லால் அடிக்கிறான் சிங்களன்
எம்நிலத்தை எவரோ கொடுத்து போக
ஏங்கி நிற்கிறோம் மீட்க  வழியின்றி
கவனிப்பாரின்றி தொடரும்
கச்சத்தீவு பிரச்னை !

அறுசுவைக்கு ஆடு வெட்டுகிறான்
அதை தடுக்க ஆளை காணோம்...
மகிழ்ந்துண்ண மாடு வெட்டுகிறான்
மறுத்து பேச மனிதரை காணோம் ....
வீட்டிலொரு பிள்ளை போல வளர்த்து
வீர விளையாட்டுக்கு காளை வந்தால்
விரைந்து வந்து தடுக்கின்றனர்-எம்
தமிழ் பாரம்பரியத்தை கெடுக்கின்றனர்
பரம்பரை மீது விழுந்த வெட்டு
தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு !
சங்கடம் தரும் ஜல்லிக்கட்டு பிரச்சனை !....

பிள்ளை படிக்க பணம் இல்லை
பெற்றோரை பார்க்க மனம்  இல்லை
மனைவியின் கஷ்டம் புரியவில்லை
மானம் போவது கூட தெரியவில்லை
மதுக்கடையில் காசினை கொடுத்து
சாக்கடையில் கிடைக்கும் மனிதன் !
தெருவெல்லாம் முளைத்த மதுக்கடைகள்
மனிதனின்  வளர்ச்சிக்கு பெரும் தடைகள்
மனித நேயம் கெடுக்கும் மது பிரச்சனை !

தமிழனுக்கு தலைவலி
தண்ணியில்தான் போலும்
கடலில் மீனவன் காவிரியில் விவசாயி
மதுக்கடையில் பாமரன்
இன்னும் எத்தனையோ பிரச்சனை தீரவில்லை
எழுதி வைத்தாலும் மாறவில்லை
அரசியல் அமைப்பு நடைமுறைக்கு வந்தது
ஆனாலும் என்ன மாற்றம்தான் தந்தது
அரசியல்வாதிகள்தான் மாறி விட்டனர்
ஊழலில் திளைப்பதிலும் பணத்தால்
சட்டத்தை வளைப்பதிலும் தேறிவிட்டனர்!
தமிழன் என்ற முறையில் மனமெல்லாம்
வருத்தம் மலை போல் இருந்தாலும்
இந்தியன் என்ற முறையில்
சொல்லிவைக்கிறேன்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் என்று !
 -கவிஅன்பு



Tuesday 22 January 2019

ஐந்து ரூபாய் மருத்துவர் - இரங்கல் பா


கண்தானம் கவிதை - Eye donate poem


கண்தானம் கவிதை - Eye donate poem




குளிரே ! தளிரே !!



காலை வணக்கம்



























மாப்பிள்ளைக்கு பிறந்தநாள் வாழ்த்து


குழந்தைகள் தின வாழ்த்து கவிதை


கிறிஸ்துமஸ் வாழ்த்து கவிதை


கஜா புயல் கவிதை - கண்ணீர் தந்த கஜா

தமிழ்நாட்டு மண்ணினிலே டெல்டாவின் மத்தியிலே
கண்ணீரை தந்து கஜா புயல் போனதே !
உயிர்தரும் காற்றுமின்று உயிரை எடுத்துதான்
உள்ளமெல்லாம் நோக வைத்து உருகுலைத்ததே ...
வீடோடு சேர்த்து பொருளெல்லாம்
விடியுமுன்னே தின்று விட்டு
விலகிச் சென்றதே !

நெல் கரும்பு  வாழை  ! ஆடு,மரம் ,காளை!!
எல்லாமே மண்ணா போச்சு என்ன இருக்கு ?
எல்லோருக்கும் உதவும் நல்ல மனுசன்
செத்து போனது போல தென்னை கெடக்கு...

சுத்திதான் பார்த்தாக்க ஒன்னும் இல்லையே
உயிர் கூட உடம்புக்கு இன்று தொல்லையே
இரத்தம்தான் வத்தி போச்சு கண்ணீர் வல்லையே

தமிழ்நாட்டு மண்ணினிலே டெல்டாவின் மத்தியிலே
கண்ணீரை தந்து கஜா புயல் போனதே !

தண்ணீர் தரும் மழைதான் கண்ணீர் தந்து
தாகத்துக்கு  நீருமின்றி தவிக்க விட்டதே

சோறு போட்ட மண்ணு சீரழிஞ்சு போச்சு
விவசாய பூமியெல்லாம் மயானம் ஆச்சு
வாழ வைக்கும்  காற்றே உனக்கிது முறையோ
இயற்கையே செய்து போன வன்முறையோ


வாழ்க்கையும் பாழாய் போயி மனசும் வாடுது
உயிர் மட்டும்தான எங்கள் உடம்பில் ஓடுது
உதவிக்கு ஆளைத்தானே  உள்ளம்  தேடுது

தமிழ்நாட்டு மண்ணினிலே டெல்டா மாவட்டத்திலே
விவசாயி வாழ்க்கை கொன்று விதி போனதே ...
உயிர்தரும் காற்றும் அது உயிரை எடுத்துதான்
உள்ளமெல்லாம் நோக வைத்து உருகுலைத்ததே ...
தண்ணீர் தரும் மழைதான் கண்ணீர் தந்து
தாகத்துக்கு நீரும் இன்றி தவிக்க விட்டதே...

-  துள.கவிஅன்பு

ஆங்கில புத்தாண்டு பாடல் - Happy new year song

ஹே !
புத்தாண்டே வா வா ...
புதிதாக வா வா - உன்னை
வரவேற்பேன் இன்பம் இன்பம் !...

ஹே !
பத்தொன்பதே  வா ....
பலன் தரவே நீ  வா - உன்னால்
போகட்டும் துன்பம் துன்பம் .....

ஹே புதிய ஆண்டே !
நீ சர்க்கரை பொங்கல் போல
நல்லா இனிக்க வேணும்
துன்பம் காலி காலி ...

எங்க கவலை எல்லாம்
போனதுன்னா
இந்த வருசம் எல்லாம்
மனம் ஜாலி ஜாலி ...

வா புத்தாண்டே !வளம் சேர்க்க....
சந்தோசம் எல்லாம் கோர்க்க
இனி எங்கும் புதுமைதானே !

வா பத்தொன்பதெனும் தேனே
பொலிவு சேர்க்கத் தானே
இனி  எல்லாம் செழுமை தானே !....
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்
                           - துள.கவிஅன்பு


பொங்கல் பாடல் - Pongal song - Pongal kavithai

வந்தது தைத் திங்களம்மா!..
தமிழருக்கோர் பொங்கலம்மா!!..
தரணியெல்லாம் வாழும் இனம் !..
தமிழனுக்கே இது நல்ல தினம்!!.. (வந்தது)

புதியன சேர்த்து பழசு மறக்கும் முதல் நாள் போகியே !..
கவலைகள் களைந்து மகிழ்வோம் மனசும் புதிதாய் ஆகியே !!..
புதுப்பானை மஞ்சள் கட்டி புத்தரிசி வெல்லந்தான்!...
புதுப்பொங்கல் பொங்கும் மறுநாள் மனசும் கூட துள்ளும்தான்!!..
உழவரை நினைப்போம் !..உறவினை அழைப்போம்!!.....
கரும்பினை சுவைப்போம் !..கவலைகள் மறப்போம் !!..
இந்தென்றும் க்ரிஸ்ட்டினென்றும் முஸ்லிமென்றும் கூறாமல்....
தமிழனாய் கொண்டாடுவோம் வேறுபாடு பாராமல்....

வந்தது தை த் திங்களம்மா
தமிழருக்கோர் பொங்கலம்மா
தரணியெல்லாம் வாழும் இனம்
தமிழனுக்கே இது நல்ல தினம்

மாடுகள் அலங்கரித்து மூன்றாம் நாள் மணி கட்டு
மாட்டோடு  வீரம் பழக இருக்கு பாரு ஜல்லிக்கட்டு
விவசாயம்,இயற்கையென்று வியந்து வணங்கும் நாளுதான் !..
தரம் பிரிச்சு வச்ச தமிழன் உலகில் சிறந்த ஆளுதான் !!..
வள்ளுவனும் போல புலவனும் யாரு ?..
அவருக்கு தினமும் இருக்குது பாரு. ...
சாதி மதம் மறந்து பொங்கலத்தான் கொண்டாடு!
சமத்துவம் தந்தான் தமிழன் என்று நீயும் பண்பாடு !!....

வந்தது தை த் திங்களம்மா
பொங்குது பார்  பொங்கலம்மா..
தரணியெல்லாம் வாழும் இனம்
தமிழனுக்கே இது நல்ல தினம் !!
பொங்கல் வாழ்த்துகளுடன்
          - துள.கவிஅன்பு