உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Tuesday 22 January 2019

கஜா புயல் கவிதை - கண்ணீர் தந்த கஜா

தமிழ்நாட்டு மண்ணினிலே டெல்டாவின் மத்தியிலே
கண்ணீரை தந்து கஜா புயல் போனதே !
உயிர்தரும் காற்றுமின்று உயிரை எடுத்துதான்
உள்ளமெல்லாம் நோக வைத்து உருகுலைத்ததே ...
வீடோடு சேர்த்து பொருளெல்லாம்
விடியுமுன்னே தின்று விட்டு
விலகிச் சென்றதே !

நெல் கரும்பு  வாழை  ! ஆடு,மரம் ,காளை!!
எல்லாமே மண்ணா போச்சு என்ன இருக்கு ?
எல்லோருக்கும் உதவும் நல்ல மனுசன்
செத்து போனது போல தென்னை கெடக்கு...

சுத்திதான் பார்த்தாக்க ஒன்னும் இல்லையே
உயிர் கூட உடம்புக்கு இன்று தொல்லையே
இரத்தம்தான் வத்தி போச்சு கண்ணீர் வல்லையே

தமிழ்நாட்டு மண்ணினிலே டெல்டாவின் மத்தியிலே
கண்ணீரை தந்து கஜா புயல் போனதே !

தண்ணீர் தரும் மழைதான் கண்ணீர் தந்து
தாகத்துக்கு  நீருமின்றி தவிக்க விட்டதே

சோறு போட்ட மண்ணு சீரழிஞ்சு போச்சு
விவசாய பூமியெல்லாம் மயானம் ஆச்சு
வாழ வைக்கும்  காற்றே உனக்கிது முறையோ
இயற்கையே செய்து போன வன்முறையோ


வாழ்க்கையும் பாழாய் போயி மனசும் வாடுது
உயிர் மட்டும்தான எங்கள் உடம்பில் ஓடுது
உதவிக்கு ஆளைத்தானே  உள்ளம்  தேடுது

தமிழ்நாட்டு மண்ணினிலே டெல்டா மாவட்டத்திலே
விவசாயி வாழ்க்கை கொன்று விதி போனதே ...
உயிர்தரும் காற்றும் அது உயிரை எடுத்துதான்
உள்ளமெல்லாம் நோக வைத்து உருகுலைத்ததே ...
தண்ணீர் தரும் மழைதான் கண்ணீர் தந்து
தாகத்துக்கு நீரும் இன்றி தவிக்க விட்டதே...

-  துள.கவிஅன்பு

No comments: