உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Tuesday 29 January 2019

மரம் வளர்ப்போம் -கவிஅன்பு

ஒளிச்சேர்க்கை வழியே-நல்
உணவினை உண்டாலும்
பிறப்பில் இருந்து இறப்புவரை
ஓய்வற்று உனக்காய்,
புகையழுக்கு,தூசியினை தின்றே
புதைந்து மண்ணில் மடிகிறோம்..
ஆனாலும் ஏனோ - எமை
ஆதரிக்க இயலாமல்
அன்னையாகிய மரங்களை
அருமை தெரியாமல் கொல்கிறாயே!..
மதி கெட்டுப்போன மானிடனே!
பேசியது இலைகள்..

மரங்களை வீழ்த்தும்போதெல்லாம்
மானிடமும் வீழ்ந்து போகிறது !
-கவிஅன்பு


கண் தானம் கவிதை-கவிஅன்பு

கணினி வல்லுனரா நீங்கள்
கண நிமிடம் கண்மூடி - கணினியை 
கையால் இயக்கி பாருங்களேன் !

கட்டிட பணியாளரா நீங்கள்
கண்கள் சிறிது மூடிவிட்டு-சிறு
கற்களை நகர்த்தி பாருங்களேன் !

பெரு,சிறு வியாபாரியா நீங்கள்
பொறுமையாய்  கண் மூடி - சில
பொருள் கொடுத்து பாருங்களேன் !

கடமைஉணர்வான அதிகாரியா நீங்கள்
கண்கள் மெல்ல மூடிவிட்டு - சிறிது
கையொப்பம் இட்டு பாருங்களேன் !

காடு,தோட்ட  விவசாயியா நீங்கள்
கருவிழி அது  பாராமல் - கொஞ்சம்
களை எடுத்துத்தான்  பாருங்களேன் !

கருத்து,பதிவிடும்  முகநூல்வாசியா நீங்கள்
கண் கொஞ்சம் திறக்காமல்-இரு
கைகளால் எழுதித்தான் பாருங்களேன் !

கண்பார்வையற்ற மனிதரின் - கொடுங்
கடின வாழ்க்கையது  புரியும்! ...
கண்தானத்தின் அவசியம் - மன 
கருத்துக்கும் அப்பொழுதுதான்  தெரியும்  !
-கவிஅன்பு




Saturday 26 January 2019

முத்தம் - கவிஅன்பு


காத்திருப்பு - கவிஅன்பு


வைகறை வணக்கம் - கவிஅன்பு


காதல் மன்றம் - கவிஅன்பு


செம்பருத்தி கவிதை - கவிஅன்பு



காலை வணக்கம் -குட்டி கதை


மனைவியின் நினைவுகள் கவிதை - கவிஅன்பு


கண்தானம் மீம்ஸ் - கவிஅன்பு



தந்தையாக போகும் நண்பருக்கு வாழ்த்துகவிதை - கவிஅன்பு


நடை பயிற்சி கவிதை - கவிஅன்பு


புரட்சி கவிதை - கவிஅன்பு


தமிழ் புத்தாண்டு கவிதை - கவிஅன்பு



Friday 25 January 2019

இணைய நாளிதழில் என் கவிதை

 January 26, 2019, 7:55 [IST] -கவிஞர் துள.கரிசல் கவிஅன்பு
 நாட்டுப்பண் பாடியதும் - உடல் 
 நரம்புகள் புடைப்பதல்ல தேசபக்தி...
Read more at: https://tamil.oneindia.com/art-culture/poems/republic-day-special-poem-339663.html

குடியரசு தின வாழ்த்து கவிதை - கவிஅன்பு

நாட்டுப்பண் பாடியதும் - உடல்
நரம்புகள் புடைப்பதல்ல  தேசபக்தி
நாட்டின் பிரச்சனைகள்  களைய- நாம்
நாளும் உழைப்பதே தேசபக்தி !..

கொடியேற்றி சுதந்திர தினம்
கொண்டாடுவது மட்டுமல்ல தேசபக்தி-சாதி
கொடுமைகள் செய்ய நினைக்காத
கொள்கையுடன் வாழ்வதே தேசபக்தி !..

பாரதமாதா படத்தினை  வைத்து குனிந்து
பணிவது மட்டுமல்ல தேசபக்தி-உயர்
பட்டம் பெற்றும்  பலநாட்டில் வசியாமல் -நம்
பாரத மக்களுக்கு பணியாற்றுவதே தேசபக்தி !....

தியாகிகள் பெருமை நினைந்து தினம்
திண்ணையில் அமர்ந்து பேசுவது மட்டுமல்ல தேசபக்தி
தனித் திறமையதை வளர்த்து உலகில் - நம்
தேசத்தின் புகழ்  உயர்த்துவதே தேசபக்தி !.....

இந்தியா என் தாய்நாடென்று வெறுமனே 
இயம்புவது மட்டுமல்ல தேசபக்தி-நம்
இனஒற்றுமை,இயற்கைவளம் சீரழியாமல்
இதயம் வைத்து காப்பதே தேசபக்தி !..
 - துள.கவிஅன்பு






















குடியரசு தின வாழ்த்து கவிதை - கவிஅன்பு

கடல் தாண்டி மீன் பிடிக்க
கட்டுடல் மீனவன் சென்றான்
படகு தொட்ட அலை கரை  வந்தது
பாவம் அவனை காணவில்லை ....
ஆட்சி மாறினாலும் அலை போல
தொடரும் மீனவனின் அவல நிலை !....

கா விரி பெயர் போல
காலமெல்லாம் விரிந்து கொண்டே
இருக்கும் காவிரி பிரச்னை
மூச்சடக்கி போராடினாலும் முழுதாய்
தீராத முல்லை பெரியார் பிரச்னை !

போரும் முடிந்தது பொழுதும் விடிந்தது
வீடிழந்து நிலமிழந்து இன்னும்
அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்
அவல நிலை தொடர்கிறதே !
தொப்புள் கோடி தூர சொந்தம்
ஈழ தமிழர் பிரச்னை!

பாட்டனின் நிலப்பரப்பு தமிழ்
பரம்பரைக்கு சொந்தமில்லையாம்
கடல் எல்லையில் கால் வைத்தால்
கல்லால் அடிக்கிறான் சிங்களன்
எம்நிலத்தை எவரோ கொடுத்து போக
ஏங்கி நிற்கிறோம் மீட்க  வழியின்றி
கவனிப்பாரின்றி தொடரும்
கச்சத்தீவு பிரச்னை !

அறுசுவைக்கு ஆடு வெட்டுகிறான்
அதை தடுக்க ஆளை காணோம்...
மகிழ்ந்துண்ண மாடு வெட்டுகிறான்
மறுத்து பேச மனிதரை காணோம் ....
வீட்டிலொரு பிள்ளை போல வளர்த்து
வீர விளையாட்டுக்கு காளை வந்தால்
விரைந்து வந்து தடுக்கின்றனர்-எம்
தமிழ் பாரம்பரியத்தை கெடுக்கின்றனர்
பரம்பரை மீது விழுந்த வெட்டு
தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு !
சங்கடம் தரும் ஜல்லிக்கட்டு பிரச்சனை !....

பிள்ளை படிக்க பணம் இல்லை
பெற்றோரை பார்க்க மனம்  இல்லை
மனைவியின் கஷ்டம் புரியவில்லை
மானம் போவது கூட தெரியவில்லை
மதுக்கடையில் காசினை கொடுத்து
சாக்கடையில் கிடைக்கும் மனிதன் !
தெருவெல்லாம் முளைத்த மதுக்கடைகள்
மனிதனின்  வளர்ச்சிக்கு பெரும் தடைகள்
மனித நேயம் கெடுக்கும் மது பிரச்சனை !

தமிழனுக்கு தலைவலி
தண்ணியில்தான் போலும்
கடலில் மீனவன் காவிரியில் விவசாயி
மதுக்கடையில் பாமரன்
இன்னும் எத்தனையோ பிரச்சனை தீரவில்லை
எழுதி வைத்தாலும் மாறவில்லை
அரசியல் அமைப்பு நடைமுறைக்கு வந்தது
ஆனாலும் என்ன மாற்றம்தான் தந்தது
அரசியல்வாதிகள்தான் மாறி விட்டனர்
ஊழலில் திளைப்பதிலும் பணத்தால்
சட்டத்தை வளைப்பதிலும் தேறிவிட்டனர்!
தமிழன் என்ற முறையில் மனமெல்லாம்
வருத்தம் மலை போல் இருந்தாலும்
இந்தியன் என்ற முறையில்
சொல்லிவைக்கிறேன்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் என்று !
 -கவிஅன்பு



Tuesday 22 January 2019

ஐந்து ரூபாய் மருத்துவர் - இரங்கல் பா


கண்தானம் கவிதை - Eye donate poem


கண்தானம் கவிதை - Eye donate poem




குளிரே ! தளிரே !!



காலை வணக்கம்



























மாப்பிள்ளைக்கு பிறந்தநாள் வாழ்த்து


குழந்தைகள் தின வாழ்த்து கவிதை


கிறிஸ்துமஸ் வாழ்த்து கவிதை


கஜா புயல் கவிதை - கண்ணீர் தந்த கஜா

தமிழ்நாட்டு மண்ணினிலே டெல்டாவின் மத்தியிலே
கண்ணீரை தந்து கஜா புயல் போனதே !
உயிர்தரும் காற்றுமின்று உயிரை எடுத்துதான்
உள்ளமெல்லாம் நோக வைத்து உருகுலைத்ததே ...
வீடோடு சேர்த்து பொருளெல்லாம்
விடியுமுன்னே தின்று விட்டு
விலகிச் சென்றதே !

நெல் கரும்பு  வாழை  ! ஆடு,மரம் ,காளை!!
எல்லாமே மண்ணா போச்சு என்ன இருக்கு ?
எல்லோருக்கும் உதவும் நல்ல மனுசன்
செத்து போனது போல தென்னை கெடக்கு...

சுத்திதான் பார்த்தாக்க ஒன்னும் இல்லையே
உயிர் கூட உடம்புக்கு இன்று தொல்லையே
இரத்தம்தான் வத்தி போச்சு கண்ணீர் வல்லையே

தமிழ்நாட்டு மண்ணினிலே டெல்டாவின் மத்தியிலே
கண்ணீரை தந்து கஜா புயல் போனதே !

தண்ணீர் தரும் மழைதான் கண்ணீர் தந்து
தாகத்துக்கு  நீருமின்றி தவிக்க விட்டதே

சோறு போட்ட மண்ணு சீரழிஞ்சு போச்சு
விவசாய பூமியெல்லாம் மயானம் ஆச்சு
வாழ வைக்கும்  காற்றே உனக்கிது முறையோ
இயற்கையே செய்து போன வன்முறையோ


வாழ்க்கையும் பாழாய் போயி மனசும் வாடுது
உயிர் மட்டும்தான எங்கள் உடம்பில் ஓடுது
உதவிக்கு ஆளைத்தானே  உள்ளம்  தேடுது

தமிழ்நாட்டு மண்ணினிலே டெல்டா மாவட்டத்திலே
விவசாயி வாழ்க்கை கொன்று விதி போனதே ...
உயிர்தரும் காற்றும் அது உயிரை எடுத்துதான்
உள்ளமெல்லாம் நோக வைத்து உருகுலைத்ததே ...
தண்ணீர் தரும் மழைதான் கண்ணீர் தந்து
தாகத்துக்கு நீரும் இன்றி தவிக்க விட்டதே...

-  துள.கவிஅன்பு

ஆங்கில புத்தாண்டு பாடல் - Happy new year song

ஹே !
புத்தாண்டே வா வா ...
புதிதாக வா வா - உன்னை
வரவேற்பேன் இன்பம் இன்பம் !...

ஹே !
பத்தொன்பதே  வா ....
பலன் தரவே நீ  வா - உன்னால்
போகட்டும் துன்பம் துன்பம் .....

ஹே புதிய ஆண்டே !
நீ சர்க்கரை பொங்கல் போல
நல்லா இனிக்க வேணும்
துன்பம் காலி காலி ...

எங்க கவலை எல்லாம்
போனதுன்னா
இந்த வருசம் எல்லாம்
மனம் ஜாலி ஜாலி ...

வா புத்தாண்டே !வளம் சேர்க்க....
சந்தோசம் எல்லாம் கோர்க்க
இனி எங்கும் புதுமைதானே !

வா பத்தொன்பதெனும் தேனே
பொலிவு சேர்க்கத் தானே
இனி  எல்லாம் செழுமை தானே !....
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்
                           - துள.கவிஅன்பு


பொங்கல் பாடல் - Pongal song - Pongal kavithai

வந்தது தைத் திங்களம்மா!..
தமிழருக்கோர் பொங்கலம்மா!!..
தரணியெல்லாம் வாழும் இனம் !..
தமிழனுக்கே இது நல்ல தினம்!!.. (வந்தது)

புதியன சேர்த்து பழசு மறக்கும் முதல் நாள் போகியே !..
கவலைகள் களைந்து மகிழ்வோம் மனசும் புதிதாய் ஆகியே !!..
புதுப்பானை மஞ்சள் கட்டி புத்தரிசி வெல்லந்தான்!...
புதுப்பொங்கல் பொங்கும் மறுநாள் மனசும் கூட துள்ளும்தான்!!..
உழவரை நினைப்போம் !..உறவினை அழைப்போம்!!.....
கரும்பினை சுவைப்போம் !..கவலைகள் மறப்போம் !!..
இந்தென்றும் க்ரிஸ்ட்டினென்றும் முஸ்லிமென்றும் கூறாமல்....
தமிழனாய் கொண்டாடுவோம் வேறுபாடு பாராமல்....

வந்தது தை த் திங்களம்மா
தமிழருக்கோர் பொங்கலம்மா
தரணியெல்லாம் வாழும் இனம்
தமிழனுக்கே இது நல்ல தினம்

மாடுகள் அலங்கரித்து மூன்றாம் நாள் மணி கட்டு
மாட்டோடு  வீரம் பழக இருக்கு பாரு ஜல்லிக்கட்டு
விவசாயம்,இயற்கையென்று வியந்து வணங்கும் நாளுதான் !..
தரம் பிரிச்சு வச்ச தமிழன் உலகில் சிறந்த ஆளுதான் !!..
வள்ளுவனும் போல புலவனும் யாரு ?..
அவருக்கு தினமும் இருக்குது பாரு. ...
சாதி மதம் மறந்து பொங்கலத்தான் கொண்டாடு!
சமத்துவம் தந்தான் தமிழன் என்று நீயும் பண்பாடு !!....

வந்தது தை த் திங்களம்மா
பொங்குது பார்  பொங்கலம்மா..
தரணியெல்லாம் வாழும் இனம்
தமிழனுக்கே இது நல்ல தினம் !!
பொங்கல் வாழ்த்துகளுடன்
          - துள.கவிஅன்பு