உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Saturday 24 February 2018

சாத்தானின் பூமி


தேசத்தின் நிலைமை

ஆயிரம் கோடி
திருடியவன் எல்லாம்
பகட்டாய் வெளிநாட்டிலே !
அரிசியை கொஞ்சம்
திருடியவன் மட்டும்
பாவமாய் சுடுகாட்டிலே !!
           -  கவிஅன்பு


 

Wednesday 21 February 2018

மய்யம்: முப்பது வருட பந்தம்

சென்னை: இன்று மதுரையில் நடத்திய பிரம்மாண்டமான மாநாட்டில், தனது கட்சியின் பெயர், மக்கள் நீதி மய்யம் என்று அறிவித்திருக்கிறார் கமல். மய்யம் என்ற வார்த்தை பலரையும் ஈர்த்திருக்கிறது. பொதுவாக தமிழகத்தில்.. மாநில கட்சிக்கு, “கழகம்” என்று  பெயர் வைப்பதுதான் வழக்கம். பா.ம.க., வி.சி.க. போன்ற சில விதிவிலக்குகள் உண்டு. ஆனால் கட்சி பெயரில் “மய்யம்” என்ற வார்த்தையை கமல் பயன்படுத்துவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. தவிர “மையம்” என்பதே சரி என்று வாதிடுவோரும் உண்டு. “மய்யம்” என்பது பெரியார் பாணி. பெரியாரும் அவரது தொண்டர்களும் தான், “ஐ”க்கு பதிலாக “அய்” என்று பயன்படுத்துவார்கள். அய்யம், அய்யப்பன் என்று எழுதுவார்கள். அதே பாணியை கமலும் பின்பற்றி வருகிறார்.

அது இன்று நேற்றல்ல.. கடந்த முப்பது வருடங்களாகவே இதே பாணியைத்தான் கமல் பின்பற்றி வருகிறார். எண்பதுகளின் இறுதியில் தனது ரசிகர் மன்றத்தினருக்காக கமல் துவங்கிய பத்திரிகையின் பெயர், “மய்யம்”. அது வழக்கமான ரசிகர் மன்ற இதழாக இல்லாமல், இலக்கிய கட்டுரைகள், அறிவியல் சார்ந்த விசயங்கள் என்று வாசகரின் (ரசிகரின்) தரத்தை உயர்த்துவதாக இருந்தது.   தவிர அப்போதே, “மய்யம்” என்ற பெயர் பேசுபொருள் ஆனது. அந்த இதழ் சில வருடங்களில் நிறுத்தப்பட்டது. ஆனாலும் கமலின் இதயத்தில் “மய்யம்” மையம்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் மய்யம் இதழை, இணைய இதழாக கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டார் கமல்.

கடந்த 2010ம் ஆண்டு, இதற்கான நடவடிக்கைகளில் இறங்கினார். இந்த இதழுக்காக பேராசிரியர் தொ.பரமசிவன், எழுத்தாளர் நீல பத்மநாபன் ஆகியோருடன்   ஆலோசனை நடத்தினார். நெருங்கிய நண்பர்களான வசனகர்த்தா கிரேஸி மோகன், தமிழறிஞர் ஞானசம்பந்தன், எழுத்தாளர் இரா.முருகன் மற்றும் நடிகை கௌதமி ஆகியோர் கொண்ட குழு மய்யம் இணைய தள வடிவமைப்பையும், செயல்திட்டத்தையும் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டார்கள். ஆனால் ஏனோ அந்த முயற்சியும் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இப்படி கடந்த 30 ஆண்டுகளாக கமலுடன் தொடர்ந்து பயணித்த “மய்யம்” தற்போது கட்சியின் பெயரில் இணைந்திருக்கிறது.
இனி கட்சி இதழாக “மய்யம்”"

Monday 12 February 2018

எனதருமை மனைவியே !

எழிலான முக தோற்றம்
எண்ணி பார்க்க வைக்கும்
உடல் தோற்றம்  கொண்டு
எத்தனைதான் பெண்கள் இங்கு
ஏராளமாய் இருந்தாலும் - என்
அழகு அதனை பொருட்படுத்தாமல்
அன்பினால் உறவை வளர்த்து
அமிர்தமாய் சொற்கள் பேசி
நேசமதை நிறைவாக தந்து
பாசமதையே பண்பாக கொண்டு
விட்டுக் கொடுக்கும் குணமுடன்
வியப்புற என்னை வாழவைத்து
கஷ்டமோ நஷ்டமோ பகிர்ந்து
காலமெல்லாம் என்னுடன் வரும்
கனிவான மனைவிபோல் வருமா?
காலமெல்லோருக்கும் இப்படி தருமா?
நேசிக்கிறாய் மனைவியே நீயென்னை
நேசிப்பேன் காலமெல்லாம் நானுன்னை !
                             - கவிஅன்பு

அப்பாவின் சொல் கவிதை - கவிஅன்பு

கருவது  வளரும்போது கால்கள் அசைய
வயிற்றருகே வாய்வைத்து - அன்பு
வாஞ்சையுடன் பேசுவதும்   ...
கனமான பொருளை தூக்காதே...
கால்கள் இடற நடக்காதே என்று
அக்கறையுடன் அன்னையிடம்
சொல்வதும்தான்  - கருவின்
காதில்விழும்  தந்தையின்
கனிவான முதல் சொற்கள் ....

மழலையாய் மண்ணில் உதித்தபின்
மடிதனில் தூக்கி வைத்து
மார்போடு சேர்த்து வைத்து
மகிழ்வோடு கொஞ்சிதலில் -தந்தையின்
அடுத்தடுத்த அன்பு சொற்களும்
ஆரம்பமாகி தொடர்கிறது   !.....

கைபிடித்து காலூன்றி நடக்கையிலும்
கண்மண் தெரியாமல் விளையாடி திரிகையிலும்
பள்ளி கல்லூரியில் பாடங்கள்  பயில்கையிலும்
அன்பான  தந்தையின் அதட்டல் சொற்களில்
அக்கறையின் மிகுதியே அதிகம் இருக்கும் !

தவறுகள் செய்தால்
கனிவுடன் பேசுவாள் தாய் - திருத்த
கண்டிப்புடன் பேசுவார் தந்தை ..
கண்டிப்பென்பது வெறும் சொற்கள் அல்ல
கண்முன் தெரியும் பிள்ளையின் எதிர்காலமது !


பொங்கல் வாழ்த்து கவிதை - கவிஅன்பு