உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Wednesday 1 July 2020

காலை வணக்கம் கவிதை

காலை வணக்கம் கவிதை

Saturday 27 June 2020

நிலா-குடம் கவிதை

குடம் கொண்டு நிலவொளி
பிடிக்க முயற்சி செய்தேன்...
 குடம் கொண்டு மேகநீர்
 நிரப்ப முயற்சி செய்தேன்..
 குடம் கொண்டு வானவில்வண்ணம்
தேக்க முயற்சி செய்தேன்...
முடியவில்லை-ஆனால்
காற்று மட்டும் அதனுள் புகுந்து
கண்ணாமூச்சி விளையாடியது
கவிதைக்கு அது போதும்..
கற்பனையில் சொற்கள மோதும்..

- கரிசல் கவியன்பு


Wednesday 8 April 2020

வைரலான கொரோனா விழிப்புணர்வு பாடல்

அரசு என்னதான் அறிவுரை கூறினாலும் இன்னும் விழிப்புணர்வு இல்லாமல்  சமூக விலகல் கடைப்பிடிக்காமல் அலட்சியமாய் இருக்கும் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு உருவாக்க வேண்டியும்,செவிலியர்,மருத்துவர்,காவலர்,துப்புரவு பணியாளர் சேவயினை நினைவு கூற வேண்டியும் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்ற இளையராஜா இசை அமைத்த கரகாட்டக்காரன் படத்தின் ஊருவிட்டு ஊருவந்து பாடலின் இசையினை வைத்து ஓர் கொரொனா விழிப்புணர்வு பாடல்.
பாடுவது எப்படி இருந்தால் என்ன அந்த இசை போதுமே.கண்டிப்பாக உற்று நோக்குவர் மக்கள்.. குறிப்பாக கிராமப்புறத்தில் கண்டிப்பா இந்த இசைக்காவே அதில் என்ன இருக்கு என்று நோக்குவர் மக்கள்.. 10 பேருக்கு விழிப்புணர்வு வந்தாலும் அது சமூகத்துக்கு நல்லதுதானே.. நன்றி..

கரிசல் கவியன்பு,
உச்சிநத்தம் கிராமம்,
இராமநாதபுரம் மாவட்டம்.
 Corono awareness paadal👇