உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Wednesday 15 July 2015

இறைவனை கவர்ந்த இசை.!.இசையை கவர்ந்த இறைவன்!!

                    தமிழ் திரையுலகின் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அய்யா அவர்களின் மறைவு இசையினை நேசிக்கும் எவரையும் வருத்தம் கொள்ள செய்து இருக்கும்.என்னுடைய மனமும் அவ்வாறே வருந்தியது.சிறு வயதில் யாருடைய இசை என்று தெரியாமலே பல பாடல்களை ரசித்தது உண்டு.சற்று விபரம் தெரிந்த பின்னர்தான் ரசித்த பாடல்களில் பெரும்பாலான பாடல்கள் விஸ்வநாதன் அய்யா இசை அமைத்த பாடல்கள் என்று அறிந்து கொண்டேன்...

         அவர் இசை அமைத்த "நிலவே என்னிடம் நெருங்காதே" பாடலை என் உதடுகள் அடிக்கடி முனுமுனுத்து கொண்டே இருக்கும்..இளைய வயதாய் இருந்தாலும் அவரின் இசையில் அமைந்த பழைய பாடல்கள் எல்லோரையும் போலவே எனக்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.இசையையும் கவிதையும்  நேசிக்கும் மனங்களுக்கு பழையது புதியது என்பது ஒரு பொருட்டல்லவே.பறந்து விரிந்த மலர் தோட்டத்தில் சிலருக்கு ரோஜாவை பிடிக்கும் சிலருக்கும் மல்லிகை பிடிக்கும் அது போலவே விஸ்வநாதன் அய்யா இசை அமைத்த பாடல்களும் ஒவ்வொருவருக்கும் ஒரு விதத்தில் பிடித்து இருக்கும்.

                           மன உணர்வுகளுக்கு ஆறுதல் தரும் பாடல்களை ரசிக்க வைக்கும் வகையில் தரும் இசைக்கடவுள் விஸ்வநாதன் அய்யா.நம் மனம் அவர் பாடல்களில் சரண் அடைந்தது அவரோ இன்று இறைவன் திருவடியில் சரணடைந்து விட்டார்.மண்ணுலக ஒளிவிளக்கு விண்ணுலக  நட்சத்தி- ரங்களில் ஒன்றாக கலந்து  விட்டது.மனித உள்ளங்களை மட்டுமே ஈர்த்த இசை  இறைவன் உள்ளதையும் ஈர்த்து விட்டது போல அதனால்தான் இறைவன் அழைத்து கொண்டானோ?..பறந்து விரிந்த மலர் தோட்டத்தில் சிலருக்கு ரோஜாவை பிடிக்கும் சிலருக்கும் மல்லிகை பிடிக்கும் அதுபோலவே விஸ்வநாதன் அய்யா இசை அமைத்த பாடல்களும் ஒவ்வொருவருக்கும் ஒரு விதத்தில் பிடித்து இருக்கும்..

    இசை உருவம் காட்டாமல் உணர்வை வருடும்..இசைக்கு பிறப்பு உண்டு இறப்பு இல்லை.வாழ்க்கை உண்டு.வயது இல்லை என்னதான் விஸ்வநாதன் அய்யா மறைந்தாலும் நம் அவரது இசையின் வழியே நம் உள்ளத்தோடு இணைத்து இருப்பார்..உணர்வுகளோடு பிணைந்து   இருப்பார்.... வெள்ளைத்தாளின் கவிதை வரிகளை வீதியெங்கும் கொண்டு செல்லும் இசையினை பெரிதும் நேசிக்கும் கவிஞன் என்ற முறையில்  விஸ்வநாதன் அய்யா அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்..
                                                                                     - கவிஅன்பு


Wednesday 1 July 2015

நீரை சேமிப்போம்!

ஓ மனிதா !
ஒவ்வொரு துளி நீரிலும்
இருக்கிறது ஓர்
உயிரின வாழ்க்கை.....
நீரை சேமிக்காவிடில்
இறக்கிறது உன்
உயிரின் வாழ்க்கை.....
உயிர்களிடத்தில் அன்பு காமி!
உயிரோடு வாழ நீரை சேமி!!
                                 - கவிஅன்பு