Sunday, 14 October 2018

அப்துல்கலாம் பிறந்தநாள் கவிதை

தமிழகத்தின்
கடைக்கோடி
என்பது  ராமேஸ்வரம் !
அங்கு பிறந்த
கடைக்குட்டி  நீதானே
தமிழகத்தின் நல்வரம் !!

உன் மரம் வளர் கவிதை
எனக்கு மிக விருப்பம் !.. ..
நின் கருத்துகள் ஆழ படித்தால்
இளைஞரெல்லாம் ஆவாரே
சிறந்த அறிவில் கர்ப்பம் !!.....

உன் அக்கினி சிறகுகள்
உயரபறந்து புகழில் சிறந்தது !
ஆனாலும் என்னவோ-உன்
மனமும் முகமும் குழந்தையாய்
மாறி அல்லவா சிரித்தது !!

வீணையோடு சேர்ந்து
விண்வெளியினை மீட்டினாய் !
பாரதமும் சிறப்பென்று பாருக்கு- ஏவு
கணையோடல்லவா காட்டினாய் !!

இந்திய மகுடத்தில் நீயொரு
ஜொலிக்கும்  ரத்தினமாம் ! உனை
இதயத்தில் நினைக்கிறோம்
உன் பிறந்த நாளான இத்தினமாம் !!

உன் பெரும்புகழ் என்பது ஏவுகணை !
எப்படி மறப்போம்  நாங்கள்
தமிழருக்கு பெருமை தந்த உனை !!...
  - கவிஅன்பு
(தமிழ் ஒன் இந்தியா நாளிதழில் பிரசுரமான இக்கவிதையின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது  - website url)
https://tamil.oneindia.com/art-culture/poems/a-reader-writes-heart-whelming-poem-behalf-abdul-kalam-on-his-332034.html















No comments:

Post a Comment