Wednesday, 22 June 2016

அவள் மட்டுமே எல்லாம்...

என் கவிதைகளை சிலர் ரசிக்க
       நானோ அவள்  கவிதைகளை ரசிப்பேன்...
என் பேச்சினை சிலர் ரசிக்க
         நானோ அவள் பேச்சினை ரசிப்பேன்.
என் சிரிப்பினை சிலர் ரசிக்க
        நானோ அவள் சிரிப்பினை ரசிப்பேன்....
என் பாடலை சிலர் ரசிக்க
       நானோ அவள் பாடலையே ரசிப்பேன்
என் குறும்பினை சிலர் ரசிக்க
        நானோ அவள் குறும்பினையே ரசிப்பேன்
என் கோபத்தை சிலர் ரசிக்க
       நானோ அவள் கோபத்தை ரசிப்பேன்...
அவளே என் இதயமென்று  ஆனபின்பு
            அவளே என் உயிரென்று ஆனபின்பு
அவளே என் சுவாசமென்று ஆனபின்பு
           அவளே என் சிந்தனையென்று ஆனபின்பு
அவளைத்தவிர வேறொன்றை ரசிக்க
            என்னால் எப்படி முடியும் ??
                                     -  கவிஅன்பு

No comments:

Post a Comment