Tuesday, 21 November 2017

உருமாறும் மேகம் - கவிதை

அமர்ந்த இடத்தில் இருந்து
அசைந்து செல்லும்
அழகான  பெண்ணை பார்க்கிறேன் !..

தாடி வைத்த முதியவர்
தள்ளாடி போவதை 
தன்னிலை மறந்து பார்க்கிறேன் !.

காகம் போல ஒரு பறவை
கண் இமைக்கும் நொடியில்
பறந்து மறைவதை என்
கண்களால் பார்க்கிறேன் !

குதிரையோடு யானையும்
கூட்டமாய் வருவதை
குதூகலமாய் நானும் பார்க்கிறேன் !

இலைகளும் மரங்களும்
தோன்றி மறையும் காட்சியை
இமைகள் ஊடே பார்க்கிறேன் !

இன்னும் பல உருவங்கள்
இமைப்பொழுதில் மாறுவதை
இமைகள் இமைக்காமல்  பார்க்கிறேன்!

வீட்டுக்குள் அமர்ந்து வெளியில்
இத்தனையும் பார்க்க இயலுமோ
விந்தையாய் தோன்றுகிறதா ?
எப்படி சாத்தியம் என்று
எண்ணவும் தோன்றுகிறதோ ?

ஒன்றும் இல்லை
ஒற்றை சன்னல் திறந்து வைத்து
உயர தெரியும் வானை பாருங்கள்..

உருமாறி  செல்லும் மேகம்தனில்
உருவங்கள்  எல்லாம் தெரியும்..

மேக திட்டுகளின் உருமாற்றத்தில
கடவுள் உருவம் கூட
கண்ணில் தெரிந்து போகும்...
               - கவிஅன்பு ,உச்சிநத்தம்.
Related image

மனைவியின் மன உணர்வு - கவிதை

மது குடி
மனம் வருந்துவேன்...
ஆனாலும்
மனதால் உன்னை
ஏற்று கொள்வேன் !...

புகை பிடி ..
பிடிக்கவில்லை
எனக்கு என்றாலும்
புன்னகை ஏந்தி உன்னை
ஏற்று கொள்வேன் !..

உடல் காயம்
தோன்ற அடி.
வலித்தாலும்
மணித்துளிகளில் மறந்து
மார்போடு உன்னை
சேர்த்து கொள்வேன்  !

உள்ளம் வலிக்க
உதடுகளால்  வசை பாடு..
உரிமை உனக்கு உண்டென்று
ஊமையாகி போனாலும்
உயிராய் உன்னை நேசிப்பேன் !

ஊதாரியாக இரு..
உள்ளம் கலங்கும்..ஆனாலும்
உவகையுடன்
உன்னை உபசரிப்பேன் !..

நேரம் கடந்து வீட்டிற்கு வா..
நெருடல் மனதில் வரும்-எனினும்
நெஞ்சார உன்னை
அணைத்து விடுவேன்  !...

வேலை வேலை
என்று என்னை மறந்து விடு....
நெஞ்சு தவிக்கும் ஆனாலும்
நேசம் உன்னிடம் காட்டுவேன்  !...

வீட்டில் உதவிகள் செய்யாதெ...
விரக்தி தோன்றும் ஆனாலும்
விரல்களால் உன்  கரம் கோர்ப்பேன் !..

என்னதான் நீ
எப்படித்தான் இருந்தாலும்
கணவன் என்று உன்னை என்
கண்ணிமையில்  வைத்து கொள்வேனடா
இதோ ஒன்றை தவிர...

மனைவி நான் என்பதை மறந்து
மாற்று பெண்ணிடம் காதல் கொண்டால்
மணவாளன் உன்னை விரும்புவதை விடுத்து
மரணத்தையே முழுதாய்
என் மனமும் விரும்புமடா..
மறுபடி உன் மீது
காதல் எப்படி அரும்புமடா.....
கட்டிய என் கணவனே!
             -கவிஅன்பு,உச்சிநத்தம்

Related image

Saturday, 11 November 2017

உச்சிநத்தம் கவிஅன்பு எழுதி,பாடிய திருமண வாழ்த்து பாடல்



உச்சிநத்தம் கவிஅன்பு எழுதிய திருமண வாழ்த்து பாடல் - குருநாதன்,மணிமேகலை தம்பதியருக்கான வாழ்த்து

கவிஅன்பு டெங்கு விழிப்புணர்வு பாடல் - Kavianbu'S Dengue awarness song



உச்சிநத்தம் கவிஅன்பு எழுதி விழைவுப்பூக்கள் சேவை அமைப்பு வெளியிட்ட டெங்கு விழிப்புணர்வு பாடல் ..


Kavianbu in tamil one india news

உச்சிநத்தம் கவிஅன்பு  எழுதிய டெங்கு விழிப்புணர்வு பாடல் செய்தி தமிழ் ஒன் இந்தியா செய்திகள் இணையத்தில் வந்தது .அதன் இணைப்பு..

https://tamil.oneindia.com/news/tamilnadu/tuticorin-ngo-s-new-initiative-dengue-awareness-298335.html

https://tamil.oneindia.com/news/tamilnadu/tuticorin-ngo-s-new-initiative-dengue-awareness-298335.html?utm_source=article&utm_medium=gplus-button&utm_campaign=gplus-share