Wednesday, 26 July 2017

இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி

புன்னகை பூத்த மலரொன்று
பூமியில் விதைக்கப்பட்ட  நாள்..
கள்ளமற்ற மழலை ஒன்று
காணாமல் போன நாள் ...
அமைதியான ஏவுகணை ஒன்று
அனைவரையும் அழவைத்த நாள்..
அக்னி சிறகொன்று  பறந்து
ஆகாயத்தில் மறைந்த நாள் ..
இலக்கே கனவென்ற இமயம்
இதயம் விம்ம சரிந்தநாள் ..
தமிழன் பெருமையுற்ற தலைவன்
தவிக்கவிட்டு சென்ற நாள் ...
(அப்துல் கலாம்  இரண்டாம் ஆண்டு
நினைவு தினத்தில் அய்யா அவர்களை
 நினைவு கூறுவோம்)

No comments:

Post a Comment